4 வருட ரசிகர்கள் காத்திருப்பு - வாடிவாசல் அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்!

Published by: ABP NADU
Image Source: twitter X handle

சூர்யா நடிப்பில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பை பற்றி 4 வருடங்களுக்குப் பின், உறுதியான அப்டேட்டைக் கொடுத்தார் வெற்றிமாறன்

Image Source: twitter X handle

2021இல், அசுரன் பட வெற்றிக்குப் பின், வாடிவாசல் திரைப்படம் சூர்யா நடிப்பில் தயாராக போவதாக கூறினார்

Image Source: twitter X handle

சி.சு செல்லப்பா எழுதிய நாவலை மையப்படுத்தி இப்படத்தை இயக்க உள்ளதாக இருந்தார் வெற்றிமாறன்

Image Source: twitter X handle

ஜல்லிக்கட்டை மையமாக கொண்ட கதை என்பதால் முன்னேற்பாடுகள் தேவையாக இருந்தது

இதற்காக நடிகர் சூர்யா ஒரு காளையை வளர்த்து, அதனுடன் பயிற்சி செய்தும் வந்துள்ளார்

Image Source: twitter X handle

சில ஆபத்துக்களை தவிர்க்க சிஜி முறையில் எடுக்க, படத்திற்கு என்றே தனியாக அனிமேட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்தில் இயங்கும் காளை ஒன்றையும் படக்குழு தயார் செய்து வருகிறது.

வெற்றிமாறன் விடுதலை 2 படத்தில் பிஸியாக இருந்ததால், இந்த படம் கிடப்பில் இருந்துள்ளது. விடுதலை 2 ரிலீஸ் பிறகு, 2025 தொடக்கத்தில் வாடிவாசல் படத்தின் அறிவிப்பை வெளியிட்டார் கலைப்புலி தாணு

Image Source: twitter X handle

ஜி.வி பிரகாஷும் படத்திற்கான இசை வேலைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்

Image Source: twitter X handle

தற்போது கல்லூரி நிகழ்வில் கலந்து கொண்ட வெற்றிமாறன், வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு மே, ஜூன் மாதங்களில் தொடங்கும் என அப்டேட் கொடுத்துள்ளார்

Image Source: twitter X handle