மேலும் அறிய
Advertisement
man vs wild : காட்டுக்குள் சாகசம்.. பியர் கிரில்ஸுடன் பயணம் செய்யும் பிரபல நடிகர்!
man vs wild நிகழ்ச்சியில் அக்ஷய் குமாரை தொடர்ந்து அஜய் தேவ்கன் கலந்து கொண்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது.
நம் அனைவருக்குமே ஒரு முறையாவது வாழ்க்கையில் காட்டிற்கு சென்று விலங்குகளைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். காட்டில் விலங்குகள் எவ்வாறு வாழ்கின்றன, எப்படி நடந்து கொள்கிறது, எப்படி மற்ற விலங்குகளை வேட்டையாடுகிறது என்பதைப் தெரிந்து கொள்ளவேண்டும் என்று நினைத்திருப்போம்.
இதனை நாம் நேரில் சென்று பார்க்க முடியவில்லை என்பதால் டிஸ்டோரி தொலைக்காட்சி man vs wild என்ற புத்தம் புது நிகழ்ச்சியைத் தொடங்கியது. மக்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காகத் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
விதவிதமான விலங்குகள், பாம்பு வகைகள், பறவைகள் என மக்களுக்கு புதிய விஷயங்களை இந்த நிகழ்ச்சி காண்பித்துள்ளது.
View this post on Instagram
மனிதனுக்கும் காட்டிற்கும் இடையே இருக்கும் புரிதலை, தத்ரூபமாக இந்த நிகழ்ச்சி காண்பித்து இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்நிகழ்ச்சியை விரும்பிப் பார்க்கின்றனர்.
இதை அயர்லாந்து நாட்டில் மிக எளிமையான குடும்பத்தில் பிறந்த பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்குகிறார். சிறு வயதாக இருந்தபோதே தந்தையுடன் மலையேற்றம், படகு ஓட்டம் செய்வதில் ஆர்வம் காட்டி வந்த இவருக்கு, காடு பிடித்தமான ஒன்றாக இயல்பில் இருந்தே வந்துவிட்டது.
மக்கள் இதுவரை செல்லாத காட்டிற்குள் செல்வது, பாலைவனத்தில் நடந்து செல்வது, தண்ணீரில் குதிப்பது என பியர் கிரில்ஸின் சாகசங்கள் இந்த நிகழ்ச்சி முழுவதும் அனைவரையும் பிரமிக்க வைக்கும்.
இந்நிலையில் MAN VS WILD நிகழ்ச்சியில் அஜய் தேவ்கன் கலந்து கொள்ளப் போகிறார். இதற்கான ஷூட்டிங் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிடில்ஸூடன் மாலத்தீவில் படப்பிடிப்பு நடத்திவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே ரஜினிகாந்த், அக்ஷய் குமார் ஆகியோர் பியர் கிசில்ஸுடன் இணைந்து காட்டிற்குச் சென்று அவருடன் இணைந்து பல விதமான சுவராசியமான சாகசங்களைச் செய்தனர். ஏன் பிரதமர் மோடி கூட பியர் கிரில்ஸுடன் இணைந்து காட்டிற்குச் சென்று சகசம் செய்தார். அந்த தருணம் என் வாழ்க்கையில் மிகவும் மறக்க முடியாத தருணம் என அவர் தெரிவித்திருந்தார்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion