மேலும் அறிய

Aishwarya Arjun - Umapathy: மூணு முடிச்சு போட்டாச்சு.. நடந்து முடிந்த ஐஸ்வர்யா அர்ஜூன் - உமாபதி திருமணம்!

Aishwarya Arjun - Umapathy: காதல் திருமணம் செய்துகொண்டுள்ள ஐஸ்வர்யா அர்ஜூன் - உமாபதி தம்பதிக்கு ரசிகர்கள் வாழ்த்து மழையைப் பொழிந்து வருகிறார்கள்

Aishwarya Arjun - Umapathi Wedding: நடிகர் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா - தம்பி ராமய்யா மகன் உமாபதி இருவரது திருமணம் நேற்று (ஜூன்.10) இருவீட்டார், உறவினர்கள், நண்பர்கள் சூழ கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது.  இந்நிலையில், இவர்களது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

ஐஸ்வர்யா - உமாபதிக்கிடையே மலர்ந்த காதல்!

Aishwarya Arjun - Umapathy: மூணு முடிச்சு போட்டாச்சு.. நடந்து முடிந்த ஐஸ்வர்யா அர்ஜூன் - உமாபதி திருமணம்!

தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் கிங்காக 90கள் முதல் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் அர்ஜூன் கர்நாடகாவைச் சேர்ந்தவர். இவரது மகள் ஐஸ்வர்யா அர்ஜூன் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக ‘பட்டத்து யானை’ என்ற திரைப்படத்தின் மூலம் 2013ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாத நிலையில், அதன் பின் காதலின் பொன் வீதியில், சொல்லிவிடவா என சில படங்களில் நடித்து பின் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

இதனிடையே இவருக்கும் நடிகர் அர்ஜூன் பங்குபெற்ற பிரபல அதிரடி ஆக்‌ஷன் நிகழ்ச்சியான ஜீ தமிழின் சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் உமாபதிக்கும் காதல் என சென்ற ஆண்டு தகவல்கள் பரவின. இதனைத் தொடர்ந்து இவர்களது கொண்டாட்டமான நிச்சயதார்த்தம் மூலம் இத்தகவல் உறுதி செய்யப்பட்டது. 

திருமணக் கொண்டாட்டம்

Aishwarya Arjun - Umapathy: மூணு முடிச்சு போட்டாச்சு.. நடந்து முடிந்த ஐஸ்வர்யா அர்ஜூன் - உமாபதி திருமணம்!

தம்பி ராமய்யாவின் மகனான உமாபதி 2017ஆம் ஆண்டு ‘அதாகப்பட்டது மக்களே’ எனும் தமிழ் படத்தில் அறிமுகமாகி பின் மணியார் குடும்பம், திருமணம், தண்ணி வண்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

இந்நிலையில் இவர்களது காதல் இருவீட்டார் சம்மதத்துடன் கைகூட, சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது. தொடர்ந்து இவர்களது திருமணம் எப்போது நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், நேற்று முன் தினம் இவர்களது திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டமான ஹல்தி புகைப்படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன.

இந்நிலையில் இருவருக்கும் நேற்று கோலாகலமாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. நடிகர் அர்ஜூன் தீவிர ஆஞ்சநேயர் பக்தராக பல ஆண்டுகளாக வலம் வரும் நிலையில், இவர்களது திருமணம் நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கெருகம்பாக்கம் ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெற்று முடிந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், காதல் திருமணம் செய்துகொண்டுள்ள ஐஸ்வர்யா அர்ஜூன் - உமாபதி தம்பதிக்கு ரசிகர்கள் வாழ்த்து மழையைப் பொழிந்து வருகிறார்கள்.

View this post on Instagram
 
A post shared by Aishwarya Arjun (@aishwaryaarjun)

இவர்களது திருமண ரிசெப்ஷன் நிகழ்வு விரைவில் இருக்கும் என்றும், இந்த விழாவில் பிரபல சினிமா துறையினர், அரசியல் கட்சியினர் கலந்துகொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: Kamal Haasan: கல்கி ட்ரெய்லரில் 3 நொடிகளில் அலறவிட்ட கமல்ஹாசன்.. படத்தில் இவ்வளவு நேரம் தான் வருவாரா!

Gautham Menon Movies: அஜித், விஜய் முதல் அமீர் கான் வரை.. பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு கைவிடப்பட்ட கெளதம் மேனன் படங்கள்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
SLAT 2025 Result: ஸ்லேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி? அதென்ன SLAT?
SLAT 2025 Result: ஸ்லேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி? அதென்ன SLAT?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
SLAT 2025 Result: ஸ்லேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி? அதென்ன SLAT?
SLAT 2025 Result: ஸ்லேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி? அதென்ன SLAT?
மாணவி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு நிகரானவர் உயிருக்கு பயந்து ஓடிய காதலன் - ஏன்?
மாணவி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு நிகரானவர் உயிருக்கு பயந்து ஓடிய காதலன் - ஏன்?
IRCTC Down: தட்கல் நேரத்தில் தகராறு! முடங்கிய ஐஆர்சிடிசி இணையத்தளம்.. பயணிகள் தவிப்பு
IRCTC Down: தட்கல் நேரத்தில் தகராறு! முடங்கிய ஐஆர்சிடிசி இணையத்தளம்.. பயணிகள் தவிப்பு
Jio 5g Unlimited Plan: வெறும் ரூ.601 தான்... நண்பர்களுக்கு டேட்டாவை பரிசாக அளிக்கும் வசதி! அதிரடி ப்ளானை இறக்கிய ஜியோ!
Jio 5g Unlimited Plan: வெறும் ரூ.601 தான்... நண்பர்களுக்கு டேட்டாவை பரிசாக அளிக்கும் வசதி! அதிரடி ப்ளானை இறக்கிய ஜியோ!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
Embed widget