Yashika Aannand: வலி எல்லாம் ரஸ்க் சாப்பிடுற மாதிரி.. கண்கலங்கியவாறு யாஷிகா ஷேர் செய்த புது வீடியோ!!
யாஷிகா ஆனந்த், இவர் ஒரு பஞ்சாப் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் படித்து, வளர்ந்தது எல்லாம் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு நகரில் தான்.
அண்மையில் விபத்து ஒன்றில் சிக்கி மீண்டு வந்துள்ள யாஷிகா தற்போது மீண்டும் சினிமாக்களில் கமிட் ஆகி வருகிறார். யாஷிகா ஆனந்த் எப்போதுமே சமூக வலைதளங்களில் பரபரப்பாக இயங்கக் கூடியவர். ஃபோட்டோ, வீடியோ, போஸ்ட், ரசிகர்களுடன் கேள்வி, பதில் நேரம் என்று தன்னை பிஸியாக லைம் லைட்டில் வைத்திருப்பார் இவர். இவரது இன்ஸ்டா பதிவுகளுக்கே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இந்நிலையில் எனக்கு வலி எல்லாம் ரஸ்க் சாப்பிடுற மாதிரி என்ற தலைப்பிட்டு வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார் யாஷிகா. தனக்கு கன் ஷாட் மூலம் காது குத்தும் வீடியோதான் அது. கண்ணுலதான் வலி என அவர் குறிப்பிட்டு இந்தவீடியோவை பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
யாஷிகா ஆனந்த், இவர் ஒரு பஞ்சாப் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் படித்து, வளர்ந்தது எல்லாம் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு நகரில் தான். மாடெலிங் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமான இவர், 2015-ஆம் ஆண்டு சந்தானம் நடித்த இனிமேல் இப்படித்தான் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் இவரால் அப்படத்தின் படப்பிடிப்பிற்கு முழுவதுமாக செல்ல இயலாததால், இவரின் கதாபாத்திரம் அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. பின்னர் 2016-ஆம் ஆண்டு ஜீவா நடித்த கவலை வேண்டாம் திரைப்படத்தில் நடித்தார்.
View this post on Instagram
அதே ஆண்டு, துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அந்தப் படங்கள் எல்லாம் அவரைப் பெரிதாக அடையாளப் படுத்தவில்லை. இந்நிலையில் தான் இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு வந்தது. விஜய் டிவியில் 2018-ஆம் ஆண்டு பிக் பாஸ் சீஸ்ஸன் 2-வில் போட்டியாளராக பங்குபெற்றார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஜோடி சீஸன் 10-ல் நடுவராக பங்கேற்றார். திரைப்படங்களில் சீரியல்களில் அப்படி இப்படி தலை காட்டினாலும் 2018-ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானார்.