”என்னைப்பற்றி கவலைப்படுவதை  மற்றவர்கள் நிறுத்துங்கள்” - வதந்திக்கு பதிலளித்தார் வனிதா

விமான ஓட்டுநர் ஒருவருடன் நான்காவது திருமணம் நடைபெற்றுள்ளதாக வெளியான தகவல் குறித்து நடிகை வனிதா ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

”செலிபிரட்டி சைல்ட் ”என்ற அந்தஸ்துடன் திரைத்துறையில் கால் பதித்தவர் நடிகை வனிதா விஜயக்குமார். நடிகர் விஜயுடன் சந்திரலேகா, ராஜ்கிரணுடன் மாணிக்கம் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். பிறகு தானே சில படங்களை தயாரித்து நடிக்கவும் செய்தார். ஆனால் அவற்றில் எல்லாம் கிடைக்காத புகழ் இவருக்கு பிக்பாஸ் நிகழ்சியின் மூலாமாக கிடைத்தது. தற்பொழுது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது , யூடியூப் சேனலில் ஆக்டிவாக வீடியோ போடுவது போன்றவற்றை செய்து வருகிறார்.

வனிதா விஜயகுமார் ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி, கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று வாழ்ந்துவந்தார். இவருக்கு இரண்டு மகள்கள் , ஒரு மகன் என மூன்று குழந்தைகள் உள்ளனர். மகன் முதல் கணவருடனும் , மகள்கள் இருவரும் வனிதாவுடனும் வசித்து வருகின்றனர். கொரோனா முதல் அலை ஊரடங்கு நேரத்தில் இவருக்கும், பீட்டர் பால் என்ற நபருக்கும் கிருத்தவ முறைப்படி வீட்டிலேயே  மூன்றாவது திருமணம் நடைபெற்றது. பீட்டர் பால் ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் அவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  வனிதா பீட்டர் பாலில் ஊரடங்கு திருமணம் பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனை எல்லாம் பொருட்படுத்தாத வனிதா பீட்டர் பால் இருவரும், கூலாக ஒருவருக்கொருவர் தங்களின் பெயரை மாற்றி டாட்டு போட்டுக்கொண்டு , தனது புதிய வாழ்க்கையை தொடங்கினர்.

ஆனால்  நான்கு மாதங்களில் பீட்டர் பால் அதீத மது பழக்கத்திற்கு அடிமையானவர், தன்னிடம் அதை மறைத்து திருமணம் செய்துவிட்டதாக  கூறிய நடிகை வனிதா , அந்த திருமண பந்தத்தில் இருந்தும் வெளியேறினார். இந்நிலையில்தான் வட இந்தியாவை சேர்ந்த  பைலட் ஒருவரை  இரண்டாவது அலை ஊரடங்கில், நான்காவதாக திருமணம் செய்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பியதை அடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வனிதா பதில் அளித்துள்ளார்.

அதில் “நான் இன்னும் சிங்கிளாகத்தான் இருக்கிறேன், என்னைப்பற்றி  வதந்திகளை யாரும் பரப்பவேண்டாம், அப்படியே பரப்பினாலும் யாரும் அதை நம்ப வேண்டாம்“ என வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் நான் சிங்கிளாக , மகிழ்ச்சியாக இருப்பதாகவும் புகைப்படம் ஒன்றினையும் வெளியிட்டுள்ளார். மேலும் தனது மகள்  ஜோவிகா வரைந்த ஓவியம் ஒன்றினை பகிர்ந்த வனிதா விஜயகுமார், நான் ஒரு அம்மாவாக பெருமைப்படுகிறேன் எனவும் மற்றொரு பதிவில் ”என்னை  நான் கவனித்துக்கொள்ளும் அளவிற்கு  வளர்ந்துவிட்டேன்  

எனவே ”என்னைப்பற்றி கவலைப்படுவதை  மற்றவர்கள் நிறுத்துங்கள்” என்றும் காட்டமாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அடுத்தவர் வாழ்க்கையில் நுழையாமல், அவரவர் வாழ்க்கையை வாழ விடுங்கள் போன்ற குரல்களும் வனிதாவிற்கு  ஆதரவாக எழுந்துள்ளன.

Tags: Vanitha marriage peter pail vijakumar pilot arunvijay

தொடர்புடைய செய்திகள்

400 குடும்பங்களுக்கு உதவிய ராணா : நெகிழ்ந்த பழங்குடிகள்..!

400 குடும்பங்களுக்கு உதவிய ராணா : நெகிழ்ந்த பழங்குடிகள்..!

"நகைச்சுவை நாடகமே உலகம் என்று மாற்றியவர் கிரேஸிமோகன்" : நினைவுகூர்ந்த கமல்ஹாசன்

Magamuni : மீண்டும் இணையும் மகாமுனி கூட்டணி : வில்லன் அவதாரத்தில் ஆர்யா ! நியூ அப்டேட்ஸ் !

Magamuni : மீண்டும் இணையும் மகாமுனி கூட்டணி : வில்லன் அவதாரத்தில் ஆர்யா ! நியூ அப்டேட்ஸ் !

மனதைப் பிளக்கும் 'கேபெர்னம்' - தவறவிடவேகூடாத ஒரு உலக சினிமா!

மனதைப் பிளக்கும் 'கேபெர்னம்' - தவறவிடவேகூடாத ஒரு உலக சினிமா!

Actor Rana on Tribal Families | ஆதிவாசி குடும்பங்களுக்கு உதவிய ‛பாகுபலி’ ராணா

Actor Rana on Tribal Families | ஆதிவாசி குடும்பங்களுக்கு உதவிய ‛பாகுபலி’ ராணா

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News :டெல்லியில் இன்று 305 நபர்களுக்கு கொரோனா

Tamil Nadu Coronavirus LIVE News :டெல்லியில் இன்று 305 நபர்களுக்கு கொரோனா

Seeman : திமுக ஆதரவு ஏடுகளை, ஊராட்சி நூலகங்களில் திணிக்கக்கூடாது - சீமான் வலியுறுத்தல்

Seeman : திமுக ஆதரவு ஏடுகளை, ஊராட்சி நூலகங்களில் திணிக்கக்கூடாது - சீமான் வலியுறுத்தல்

கோவையில் 1049 ஹெக்டேர் அதிகரித்த வனப்பரப்பு : ஒரே மாதத்தில் சாத்தியமாக்கிய ஆட்சியர் நாகராஜன்

கோவையில் 1049 ஹெக்டேர் அதிகரித்த வனப்பரப்பு : ஒரே மாதத்தில் சாத்தியமாக்கிய ஆட்சியர் நாகராஜன்

'இதுதாங்க சோஷியல் மீடியா..' - கருணைக்கொலை கோரிக்கை வைத்த டாக்டர்; உடனே பேசிய அமைச்சர்!

'இதுதாங்க சோஷியல் மீடியா..' - கருணைக்கொலை கோரிக்கை வைத்த டாக்டர்; உடனே பேசிய அமைச்சர்!