மேலும் அறிய

AjithKumar: மீண்டும் மீண்டுமா? குட் பேட் அக்லி-யில் அஜித்குமாருக்கு ஜோடி இந்த நடிகையா!

அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திர நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விடாமுயற்சி மட்டுமின்றி அஜித் தற்போது குட் பேட் அக்லி என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

அஜித்துக்கு ஜோடி யார்?

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இந்த படத்தில் அஜித் மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்து வருகிறார். குட் பேட் அக்லி படத்தின் போஸ்டர்கள் அடிக்கடி வெளியாகி அஜித் ரசிகர்களை ஆனந்தப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், குட் பேட் அக்லி படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்திலும் த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த சூழலில், விடாமுயற்சி மற்றும் குட்பேட் அக்லி படத்தில் கதாநாயகியாக அஜித்துடன் த்ரிஷா ஜோடி சேர்ந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொங்கல் வெளியீடு:

அஜித்தின் 63வது படமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. மொத்தம் ரூபாய் 270 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குட் பேட் அக்லி படத்திற்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் வேலுகுட்டி படத்தொகுப்பு செய்கிறார். குட் பேட் அக்லி திரைப்படம் அடுத்தாண்டு பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகிறது. இந்தாண்டு தீபாவளி வெளியீடாக விடாமுயற்சி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், பொங்கல் வெளியீடாக குட் பேட் அக்லி படம் வெளியாக இருப்பது அஜித் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேங்ஸ்டர் படம்:

அஜித்-த்ரிஷா ஜோடி இணைந்து ஜீ, கிரீடம், மங்காத்தா ஆகிய படங்களில் நடித்துள்ளனர். மங்காத்தா படத்திற்கு பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித் – த்ரிஷா விடாமுயற்சியில் ஜோடி சேர்ந்துள்ளனர். வித்தியாசமான கேங்ஸ்டராக அஜித்குமார் குட் பேட் அக்லியில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் அஜித்குமாருடன் இணைந்து சஞ்சய் தத், அர்ஜூன், ஆரவ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
Embed widget