Trisha: காவல்துறை அதிகாரியாக த்ரிஷா! ரிலீசானது ப்ருந்தா ட்ரெயிலர் - எப்போது வெளியீடு?
த்ரிஷா நடித்த ப்ருந்தா வெப்சீரிஸின் ட்ரெயிலர் இன்று வெளியாகியது. முதன்முறையாக த்ரிஷா நடித்த வெப்சீரிஸ் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக உலா வருபவர் த்ரிஷா. 2000 காலகட்டத்தில் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமான த்ரிஷா, 24 ஆண்டுகளாகவும் இன்றும் கதாநாயகியாக சினிமாவில் அசத்தி வருகிறார். தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரங்களான விஜய், அஜித்துடன் இன்றும் ஜோடியாக நடித்து வருகிறார்.
த்ரிஷாவின் ப்ருந்தா:
இளம் ஹீரோயின்களுக்கு சவால் அளிக்கும் விதமாக தொடர்ந்து அசத்தி வரும் த்ரிஷா தற்போது ப்ரிந்தா என்ற வெப்சீரிஸில் நடித்துள்ளார். இந்த வெப்சீரிஸில் போலீஸ் எஸ்.ஐ.யாக த்ரிஷா நடித்துள்ளார். இந்த நிலையில், ப்ருந்தா வெப்சீரிஸின் தொடர் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.
இந்த வெப்சீரிஸ் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. வரும் ஆகஸ்ட் 2ம் தேதி இந்த வெப்சீரிஸ் வெளியாக உள்ளது. தொடர்ந்து நடக்கும் கொலைகள், மாந்திரீகம் உள்ளிட்டவற்றை பின்னணியாக கொண்ட இந்த வெப்சீரிஸில் படித்து நேரடியாக எஸ்.ஐ. பொறுப்பேற்றுள்ள த்ரிஷா சக காவல் அதிகாரிகள், உயர் அதிகாரிகளை எதிர்த்து எவ்வாறு இந்த கொலை வழக்கை கையாள்கிறார் என்பதே கதையாக அமைந்துள்ளது.
ஓடிடி-யில் அறிமுகம்:
இந்த வெப்சீரிஸில் த்ரிஷாவுடன் பிரபல மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாறன், ஜெயபிரகாஷ், ஆமனி, ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி, ராகேந்து மௌலி ஆகியோர் நடித்தள்ளார். நேரடியாக தெலுங்கில் உருவாகியுள்ள இந்த வெப்சீரிஸிற்கு கதை, திரைக்கதை எழுதி சூர்ய மனோஜ் வங்காளா இயக்கியுள்ளார்.
ஆஷிஷ் கொல்லா இயக்கயியுள்ள தயாரித்துள்ள வெப்சீரிசிற்கு தினேஷ் பாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். அன்வர் அலி படத்தொகுப்பு செய்துள்ளார். லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து மீண்டும் நாயகியாக அசத்திய த்ரிஷா, தற்போது விடாமுயற்சி படத்திலும் அஜித்திற்கு ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார். ஓரிரு நாட்களுக்கு முன்பு அஜித் – த்ரிஷா ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை விடாமுயற்சி படக்குழு வெளியிட்டது. அதற்கு பெரும் வரவேற்பை கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஓடிடி-யில் த்ரிஷா நடித்த வெப்சீரிஸ் வெளியாவது இதுவே முதன்முறை ஆகும்.