Sunny Leone: சகோதரருக்கு ராக்கி! சன்னி லியோன் ஹேப்பி! ரக்ஷா பந்தன் கொண்டாட்டம்! வைரல் போட்டோ!
அண்ணன் - தங்கை உறவை போற்றும் விழாவான ரக்ஷா பந்தனை முன்னிட்டு பிரபல நடிகை சன்னி லியோன் தனது சகோதரருக்கு ராக்கி கயிறு கட்டியுள்ளார்.
அண்ணன் – தங்கை உறவு என்பது மிகவும் புனிதமான உறவாக போற்றப்படுகிறது. அண்ணன் – தங்கை உறவை போற்றும் விதமாக ரக்ஷா பந்தன் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
ரக்ஷா பந்தன் கொண்டாடிய சன்னி லியோன்:
வட இந்தியாவில் ரக்ஷா பந்தன் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பெண்கள் தங்களது சகோதரர்களுக்கு மற்றும் அண்ணன்களாக கருதுபவர்களுக்கு கைகளில் ராக்கி கயிறு அணிவிப்பது வழக்கம் ஆகும்.
இதையடுத்து, பிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோன் ரக்ஷா பந்தன் தினத்தை கொண்டாடியுள்ளார். இதையடுத்து, அவரது சகோதரர் சந்தீப் வோராவுக்கு ராக்கி கயிறு கட்டியுள்ளார். இந்த புகைப்படங்களை அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், மேலும், இறுதியாக நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு நாங்கள் ரக்ஷா பந்தன் விழாவில் சேர்ந்து உள்ளோம். எனது தம்பிக்கு அன்புகள் என்று பதிவிட்டுள்ளார்.
Finally after years we are together on Raksha Bandhan!!
— Sunny Leone (@SunnyLeone) August 20, 2024
@chefsundeep love you little brother!! pic.twitter.com/nCqY8EIdF5
பல மொழிகளில் பிசி:
சன்னி லியோனின் சகோதரர் சமையற்கலை நிபுணராக உள்ளார். சன்னி லியோன் கடந்த 2012ம் ஆண்டு முதல் இந்தி படங்களில் நடித்து வருகிறார். இவருக்கென்று லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் இவர் நடித்துள்ளார்.
நடிப்பு, மாடலிங் என கலக்கி வரும் சன்னி லியோன் சமூக சேவைகளுக்கும் அவ்வப்போது நிதி உதவி செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழில் சன்னி லியோன் நாயகியாக நடித்துள்ள வீரமாதேவி படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.