சிம்புவுடன் சித்தி இட்னானிக்கு காதல் திருமணம்...வாழ்த்திய ரஜினிகாந்த், உதயநிதி ஸ்டாலின்...அதிர்ச்சியில் ரசிகர்கள்
சினிமா பயணம் குறித்த பல விஷயங்களை தெரிவித்துள்ளார். நான் மாநில அளவில் எறிபந்து வீராங்கனை. ஆனால் மாடலிங் செய்து சினிமாவுக்கு வந்தேன்.
வெந்து தணிந்தது காடு படத்தின் நடிகை சித்தி இட்னானி சிம்புவுடனான காதல் கதை ஒன்றை தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
சிலம்பரசன் - கௌதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி 3வது முறையாக இணைந்துள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுக நடிகை சித்தி இதானி நடித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 15 ஆம் தேதியான நேற்று தியேட்டர்களில் வெளியானது. முன்னதாக வெந்து தணிந்தது காடு படத்தின் திரையரங்க விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியதால் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதற்கு ஏற்றாற்போல் படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
View this post on Instagram
இதனிடையே படத்தின் ஹீரோயின் சித்தி இட்னானி பிரபல இணைய ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் சினிமா பயணம் குறித்த பல விஷயங்களை தெரிவித்துள்ளார். நான் மாநில அளவில் எறிபந்து வீராங்கனை. ஆனால் மாடலிங் செய்து சினிமாவுக்கு வந்தேன். எனக்கு விளையாட்டு தவிர்த்து பாடவும் தெரியும் என கூறியுள்ளார். மேலும் எனக்கு சேலைகள் என்றால் ரொம்ப பிடிக்கும். அதேபோல் சௌகரியமான ஆடை அணியும் போது நம்பிக்கையாக இருக்கும். சினிமாவை பொறுத்தவரை நயன்தாராவுக்கு அனைத்து விதமான உடைகளும் பொருத்தமானதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
அப்போது தொகுப்பாளர் சிலம்பரசன், ரஜினிகாந்த், சித்தி விநாயகர் கோவில், FDFS, முதல்வர் ஸ்டாலின் ஆகிய 5 வார்த்தைகளை பயன்படுத்தி கதை ஒன்றை சொல்லுமாறு கூறுகிறார். இதனையடுத்து கதை சொல்ல தொடங்கும் சித்தி, என்னுடைய அப்பா ரஜினிகாந்த். அவர் எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடிவு செய்கிறார். அப்பாவும் உதயநிதி ஸ்டாலினும் நண்பர்கள். இருவரும் என் கல்யாணம் குறித்து பேசுகிறார்கள். அப்போது உதயநிதி, என்னுடைய தம்பி ஒரு பெண்ணை காதலிக்கிறார். இல்லையென்றால் அவனுக்கே உங்கள் மகளை கல்யாணம் செய்து வைத்திருப்பேன் என ரஜினியிடம் கூறுகிறார்.
உடனே நான் சென்று அப்பாவிடம் ஒரு பையனை காதலிப்பதாகவும், என்னை கல்யாணம் செய்ய சொல்லி கட்டாயப்படுத்த வேண்டாம் என தெரிவிக்கிறேன். அதற்கு சரி என சொல்லி மீட் பண்ண வர சொல்கிறார். நானும் சிம்புவும் சிறு வயதில் இருந்தே காதலித்து வருகிறோம். அவரை கொண்டு வந்து எங்க அப்பாவிடம் அறிமுகப்படுத்திய போது சிம்புவுக்கு ஓகே சொல்கிறார். சிம்பு எங்கள் அண்ணனிடம் கேட்டு சொல்கிறேன் என கூறுகிறேன். அந்த அண்ணன் தான் உதயநிதி ஸ்டாலின். எங்கள் இருவருக்கும் சித்தி விநாயகர் கோவிலில் திருமணம் நடக்கிறது என அந்த கற்பனை கதையை கூறுகிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் இந்த கதையை பார்த்தால் கற்பனை மாதிரி தெரியவில்லை என கூறி கலாய்த்து வருகின்றனர்.