திருமண வாழ்க்கைக்கு சின்ன சின்ன அட்ஜெஸ்ட்மெண்ட் போதும்! - நடிகை ராதா ஓபன் அப்!
"எங்கள் இருவருக்கும் பிடித்தமான விஷயத்தை செய்துக்கொள்ள நாங்கள் இருவரும் இடமளிக்கிறோம் அவ்வளவுதான்"
80-களின் எதார்த்த நாயகியாக கொண்டாடப்பட்டவர் நடிகை ராதா. அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு எண்ட்ரி கொடுத்த ராதாவிற்கு அந்த காலக்கட்டத்தில் நடிகர்களுக்கு இணையாக ரசிகர் மன்றங்கள் இருந்தன.
View this post on Instagram
பீக்கில் இருந்த பொழுதே திருமணம் :
நடிகை ராதா பீக்கில் இருந்த பொழுதே திருமணம் செய்துக்கொண்ட நடிகைகளுள் ஒருவர். இவர் 1991 இல் பிரபல தொழிலதிபரான ராஜசேகரன் நாயரை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிகளுக்கு விக்னேஷ் நாயர் என்ற மகனும், கார்த்திகா நாயர் மற்றும் துளசி நாயர் என இரண்டு மகள்களும் உள்ளனர். மகள்கள் இருவருமே சினிமாவில் நாயகிகளாக அறிமுகமாகினர். ஆனால் ராதா அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை
View this post on Instagram
லைஃப்க்காக அட்ஜெட் பண்ணனும் :
திருமணத்திற்குப் பிறகு குடும்பம் , குழந்தைகள் என அந்த வளையத்திற்குள்ளேயே தன்னை ஈடுபடுத்திக்கொண்ட ராதா அதனை ஒருபோதும் பாரமாகவே எண்ணியத்தில்லை. திருமணத்திற்கு பிறகான வாழ்க்கைதான் தனக்கு விடுதலை போல இருந்ததாக நேர்காணலில் தெரிவித்திருக்கிறார். கணவன் மனைவி உறவு குறித்து இளம் தலைமுறைகளுக்கு அட்வைஸ் செய்த ராதா, இருவருமே இருவருக்காகவும் சின்ன சின்ன அட்ஜெஸ்ட்மெண்ஸ் செய்தால் போதும். மிகப்பெரிய புரிதல் என்றெல்லாம் ஒன்று தேவையில்லை. நானும் என் கணவரும் நேற்றுதான் திருமணம் ஆனது போல இருக்கிறோம். எங்கள் இருவருக்கும் பிடித்தமான விஷயத்தை செய்துக்கொள்ள நாங்கள் இருவரும் இடமளிக்கிறோம் அவ்வளவுதான் என்றார். தற்போது ராதா சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் அவ்வபோது தலைக்காட்டி வருகிறார். இவரது சகோதரி அம்பிகாவும் வெள்ளித்திரையை ஒரு கலக்கு கலக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram