Pooja Hegde: காதலில் விழுந்த பூஜா ஹெக்டே? சல்மான் கான் இல்லை, ஆனால் வேறு பாலிவுட் நடிகருடன் உலா!
Pooja Hegde Love: முன்னணி தென்னிந்திய நடிகையான பூஜா ஹெக்டே பாலிவுட் நடிகர் ரோஹன் மெஹ்ராவை காதலித்து வருவதகாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
![Pooja Hegde: காதலில் விழுந்த பூஜா ஹெக்டே? சல்மான் கான் இல்லை, ஆனால் வேறு பாலிவுட் நடிகருடன் உலா! actress Pooja Hegde spotted with bazaar actor rohan mehra in car Pooja Hegde: காதலில் விழுந்த பூஜா ஹெக்டே? சல்மான் கான் இல்லை, ஆனால் வேறு பாலிவுட் நடிகருடன் உலா!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/02/df6a1609dc782d7cc699d020403c6eaa1712051030185572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde). இருவரும் மும்பையில் ஒரே காரில் சென்றதைத் தொடர்ந்து இருவரும் காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் கிசுகிசுப்பு தொடங்கியுள்ளது.
பூஜா ஹெக்டே
டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி திரைப்படத்தில் நடிகர் ஜீவாவின் ஜோடியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. முதல் படமே சரியாக அமையாததால் பூஜா ஹெக்டே தனது பயணத்தை டோலிவுட் பக்கம் திருப்பினார். அங்கு அவருக்கு அடுத்தடுத்து பல படங்கள் அமைந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார்.
குறிப்பாக நடிகர் அல்லு அர்ஜுன் உடன் "புட்ட போம்மா..." பாடலில் பூஜா போட்ட ஆட்டம் மூலம் உலகளவில் ட்ரெண்டிங் ஆனார். தொடர்ந்து மீண்டும் தமிழில் 'பீஸ்ட்' திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். மாஸ் ஹீரோ விஜய்யின் ஜோடியாக நடித்தாலும் பாடல்களை தவிர வேறு எங்கும் சொல்லுக்கொள்ளும்படியான டயலாக் கூட இல்லை என்பதால் மீண்டும் பூஜாவின் மார்க்கெட் சரிந்தது. தற்போது இந்தியில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
சல்மான் கான் உடன் வதந்திகள்
திரைப்படங்களில் நடிப்பது தவிர்த்து பல்வேறு விளம்பரங்களில் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே. தவிர தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபிட்னஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்தாலும் தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பெரிய அளவில் வெளியே பகிர்ந்துகொள்ள விரும்பாதவர் பூஜா. பூஜாவும் பாலிவுட் நடிகர் சல்மான் கானும் டேட் செய்து வருவதாக பாலிவுட் வட்டாரத்தில் முன்னதாகத் தகவல்கள் பரவின. இதனைத் தொடர்ந்து தான் சிங்கிள் தான் என்று விளக்கமளித்தார் பூஜா.
பாலிவுட் நடிகருடன் காரில்
Pooja spotted with her good friend Rohan Mehra. Hope she doesn't break hearts anytime soon 😭😭😭😭😭😭😭pic.twitter.com/LsE3VTlc42
— Valentino Gopalakrishna (@SuryapetaRemo) March 31, 2024
இந்நிலையில், சமீபத்தில் நடிகை பூஜா ஹெக்டே பாலிவுட் நடிகர் ரோஹன் மெஹ்ராவுடன் காரில் சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து இருவரும் காதலித்து வருவதாக மீண்டும் பாலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தியில் வெளியான பஜார் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் ரோஹன். மேலும் பாலிவுட் இயக்குநரான சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய பாஜிராவ் மஸ்தானி படத்தில் உதவி இயக்குநராகவும் இவர் பணியாற்றி இருக்கிறார். இந்த வதந்திகள் தொடர்பாக இருவர் தரப்பில் இருந்தும் இன்னும் விளக்கமளிக்கப்படவில்லை.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)