Parvati Nair: ”என்னை அடிச்சு, என்மேல எச்சில் துப்பினாங்க”...நடிகை பார்வதி நாயரின் வீட்டு பணியாளர் சரமாரி குற்றச்சாட்டு
சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வரும் நடிகை பார்வதி நாயரின் வீட்டில் கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி திருட்டு நடைபெற்றது.
நடிகை பார்வதி நாயர் தனது வீட்டில் திருடப்பட்டதாக அளித்த புகாரில் குற்றம்சாட்டப்பட்ட பணியாளர், அவர் மீது சரமாரியான குற்றம்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தின் வில்லனாக நடித்த அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். தொடர்ந்து நிமிர்ந்து நில், மாலை நேரத்து மயக்கம், உத்தம வில்லன் ஆகிய படங்களில் நடித்த அவர் கடைசியாக 2017 ஆம் ஆண்டு தமிழில் பார்த்திபன் இயக்கிய கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் மலையாளம்,தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பல படங்களிலும் பார்வதி நாயர் நடித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது போட்டோக்கள், வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். தற்போது கம் தகம் புத்தகம் என்ற மலையாளப் படத்திலும், பெயரிடப்படாத தெலுங்கு படத்திலும் பார்வதி நாயர் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வரும் நடிகை பார்வதி நாயரின் வீட்டில் கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி திருட்டு நடைபெற்றது. தனது வீட்டில் பணிபுரியும் ஊழியர் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் ரூ.6 லட்சம் மற்றும் ரூ.3 லட்சம் மதிப்பிலான கைக்கடிகாரங்கள், ரூ. 2 லட்சம் மதிப்புள்ள லேப்டாப்,செல்போன் உள்ளிட்ட பொருட்களை திருடியதாக நுங்கம்பாக்கம் போலீசில் புகாரளித்தார்.
View this post on Instagram
இந்நிலையில் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து சுபாஷ் சந்திர போஸ் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் நடிகை பார்வதி நாயர் வீட்டில் பணிபுரிந்து வந்த தன்னை அவர் அடித்து துன்புறுத்தி மன உளைச்சலுக்கு உள்ளாக்கி திருட்டு பட்டம் சுமத்துவதாக தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுபாஷ் இரவு நேரங்களில் நடிகை பார்வதி நாயர் ஆண் நண்பர்களுடன் மது விருந்து நடத்தியதை பார்த்ததால் தன் மீது கோபம் ஏற்பட்டதாகவும், இரவில் நடந்ததை வெளியில் சொல்லி விடுவேனோ என்ற அச்சத்தில், அன்று முதலே அநாகரிகமாக நடத்தி வந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பார்வதி நாயர் தன்னை அடித்து துன்புறுத்தி எச்சில் துப்பியதோடு, அடியாட்களை வைத்து அடித்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நான் காவல்துறையில் புகாரளித்ததால் கோபமான பார்வதி, என்னிடம் கோபமாக பேசி தன்னை பாலியல் வன்கொமை செய்ய முயன்றதாக மீண்டும் புகார் அளிப்பேன் என மிரட்டினார் என்றும், நான் திருடியதாக சொல்லப்படும் எந்த பொருட்களையுமே இதுவரை அவரது வீட்டில் பார்க்கவில்லை எனவும் சுபாஷ் சந்திரபோஸ் தெரிவித்துள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.