Nivetha Pethuraj : டிண்டர் வேணாம், டேட்டிங் போக இங்கே வாங்க... நிவேதா பெத்துராஜ் சொன்னதை சர்ச்சைக்கும் நெட்டிசன்கள்..
சென்ற ஆண்டு உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களுக்கென பிரத்யேகமாக 'அன்பே’ எனும் டேட்டிங் ஆப் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது.
சங்க காலம் தொட்டு அனைத்துவித கலை வடிவங்களின் மூலமும் காதல் வளர்த்த தமிழ் சமூகத்துக்கென, தமிழ் மக்களுக்காக இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் ’அன்பே’ எனும் பிரத்யேக டேட்டிங் ஆப் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது.
தமிழர்களால் தமிழர்களுக்காக...
இந்தியாவில் டிண்டர், பம்பிள், ஓகே க்யூபிட், வூ போன்ற டேட்டிங் ஆப் கள் இன்றைய இளைஞர்கள் மத்தியில் அதிகம் உபயோகிக்கப்பட்டு வருகின்றன.
இவை தவிர ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களும், மேட்ரிமோனி தளங்களும் கூட பல சமயங்களில் டேட்டிங் ஆப்களாகவே உபயோகிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், சென்ற ஆண்டு உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களுக்கென பிரத்யேகமாக 'அன்பே’ எனும் டேட்டிங் ஆப் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது.
தமிழ் வழியில் டேட்டிங்
இந்நிலையில், ’தமிழ் வழியில் டேட் செய்யுங்கள்’ எனும் மேற்கோளுடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஆப் குறித்து பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ் தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த ஆப் குறித்து தான் பகிர்ந்துள்ள வீடியோவில், ”கேஷுவல் உறவுகளுக்கு மத்தியில் உண்மையான உறவைத் தேட முயல்பவர்கள் மாட்டிக் கொண்டு முழிக்கறாங்க. உண்மையான உறவைத் தேடுகிற தமிழர்களுக்கென பிரத்யேகமாக இந்த ஆப் தொடங்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
வாழ்க்கைல சின்ன சின்ன விஷயங்கள பகிர்ந்துக்க, லாங் ட்ரைவ் போக, இளையராஜா பாடல்கள் கேட்டு வைப் பண்ண சரியான பார்ட்னர கண்டுபிடிக்க இன்னைக்கே அன்பே ஆப் ல இணையுங்க” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்