நயன்தாராவுக்கு வந்த ‛சர்ப்ரைஸ்’ கிப்ட்... கதவை தட்டி பரிசளித்த வெறித்தனமான ரசிகர்!
எந்த பந்தாவும் இல்லாமல், இன்முகத்தோடு நயன்தாரா அந்த பரிசை பெற்றுள்ளார்.
லேடி சூப்பர் ஸ்டார் என அன்போடு அழைக்கப்படும் நயன்தாரா, நீண்ட காதலை முடிவுக்கு கொண்டு வந்து, இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் சமீபத்தில் திருமணத்தை முடித்தார். தமிழ்நாட்டில் மகாபலிபுரத்தில் திருமணம், மறுநாள் ஆந்திராவில் திருப்பதியில் தரிசனம், அதன் பின் கேரளாவில் பிறந்த வீட்டில் விருந்து என பிஸியோ... பிஸியில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி புதுமண வாழ்க்கையை தொடங்கியுள்ளது.
விரைவில் ஹனிமூன் புறப்பட்ட இப்போதே தயாராகி வரும் அவர்கள், பத்திரிக்கையாளர்களிடம் வாழ்த்து பெற்றது, அதன் பின் ரசிகர்களிடம் வாழ்த்து பெற்றது என நன்றி தெரிவிக்கும் படலத்தையும் மற்றொரு பக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், மாமியார் வீட்டில் விக்னேஷ் சிவனுக்கு செமத்தியான விருந்து நடந்து கொண்டிருக்கிறது. வீடு, ஓட்டல் என ஓமன பெண்ணின் ஓயாத விருந்தில் சேட்டனாக மாறி, சேமமாக இருக்கிறார் விக்கி.
View this post on Instagram
இதற்கிடையில் நயன்தாராவின் திருமணத்தை ஒரு தரப்பு ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏக்கத்தில் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு எதுவும் செய்யாது என்றாலும், ஒரு சில ரசிகர்கள், தங்கள் தலைவிக்கு கிஃப்ட் வாங்கி தருவதை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். அதிலும் ஒரு ரசிகர், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் குடும்பத்தார் அனைவரும் இணைந்து நிற்கும் போட்டோவை பெரிய அளவில் ஃப்ரேம் செய்து, அதை நயன்தாராவை தேடிச் சென்று வழங்கியுள்ளார்.
View this post on Instagram
கதவை தட்டி, அவர் அளித்த அன்பு பரிசை கண்டு அசந்துவிட்டாராம் நயன்தாரா. அன்பு ஒன்று தானே , அதிர்ச்சியானது. அதுவும் இன்ப அதிர்ச்சியானது. எந்த பந்தாவும் இல்லாமல், இன்முகத்தோடு நயன்தாரா அந்த பரிசை பெற்றுள்ளார்.