ஜாலியான டைப்; கல்யாணத்துக்கு பிறகு அஜித் ரொம்பவே மாறிட்டாரு; மந்த்ரா சுவாரஸ்ய தகவல்!
அஜித் ரொம்பவே ஜாலியான டைப், அவர் கல்யாணத்திற்கு பிறகு தான் ரொம்பவே மாறிவிட்டார் என்று நடிகை மந்த்ரா கூறியுள்ளார்.

பிரியம் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மந்த்ரா. தமிழில் மந்த்ரா என்று அடையாளம் அழைக்கப்பட்ட இவர் தெலுங்கு சினிமாவில் ராசி என்ற பெயரில் அழைக்கப்பட்டார். ஆனால் பிறக்கும் போது இவருடைய பெயர் விஜயா. குடும்பக் கதைகளை மையப்படுத்திய படங்களில் ஏராளமாக நடித்துள்ளார். இவருடைய ஹோம்லி லுக் இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குவிய காரணமாக இருந்தது. விஜய், அஜித், கார்த்திக் என்று மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
ஆனால், இவரால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மட்டும் வர முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம், தமிழிலில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த போது தெலுங்கு பக்கம் திரும்பினார். அங்கு முன்னனி நடிகைகளில் ஒருவராக மாறினார். கடந்த 2005 ஆம் ஆண்டு இயக்குநர் ஸ்ரீ முனி என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து ஒதுங்கினார். இதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கம்பேக் கொடுத்தார்.
கடைசியாக 2017ஆம் ஆண்டு லங்கா என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். இந்த நிலையில் தான் தனியார் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அஜித் பற்றி மந்த்ரா பேசியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது, அஜித் ரொம்பவே ஜாலியான டைப். ரெட்டை ஜடை வயசு ஷூட்டிங் ஸ்பாட்டில் ஃப்ரீயா இருக்கும் போது எனது பெற்றோருடன் சீட்டு ஆடுவாரு. நான் ரொம்ப சைலண்ட் டைப். யாரிடமும் பேசமாட்டேன். என்னுடைய அம்மாவும், அப்பாவும் என்னுடன் தான் இருப்பார்கள். அதனால், நான் அமைதியாக தான் இருப்பேன். அந்த நேரங்களில் எல்லாம் நான் அஜித்தை பார்த்துக் கொண்டு தான் இருப்பேன். நான் அஜித்தை பார்த்தால் ஏன் அப்படி பாக்குற என்று கேப்பாங்க. நான் ஒன்னுமில்ல என்று சொல்லிடுவேன்.
கல்யாணத்துக்கு பிறகு அஜித் ரொம்ப மாறிவிட்டார். வெத்தலகொடியே கொடியே கொடியே வெத்தலகொடியே என்ற பாடல் ஷூட்டிங்கின் போது அஜித் உடன் ஷாலினியும் வந்திருந்தாங்க. அப்போது அஜித் அமைதியாக இருந்தார். பெருசா யாரிடமும் அவர் பேசவில்லை என்று பேசியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

