Chhavi Mittal: மார்பகங்கள் குறித்த ஆபாச கமெண்ட்கள்.. இன்ஸ்டாவில் பதிலடி கொடுத்த பிரபல நடிகை!
நடிகை சாவி மிட்டல் துபாய் சுற்று பயணத்தின் போது எடுத்த புகைப்படங்களை தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அவரின் அந்த புகைப்படங்கள் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது.
நாகின், விராசாட் உள்ளிட்ட இந்தி தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பிரபலமானவர் நடிகை சாவ்வி மிட்டல். இவர் கடந்த ஆண்டு மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இவர் அண்மையில் தனது பிகினி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்; இதனை விமர்சித்து நெட்டிசன்கள் பலர் கருத்துக்களை பதிவிட்டனர்; இந்த நிலையில் அது தொடர்பான ஸ்கிரீன்ஷாட்களை சாவ்வி பகிர்ந்து ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.
View this post on Instagram
அதில் "எனது மார்பகங்கள் ஒரு வியாபாரப் பொருள் போல விவாதிக்கப்பட்டு வருகிறது " என்று குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “ஆம் உணர்ச்சியின்மை இன்னும் நடப்பில் இருக்கிறது. நான் சமீபத்தில் துபாய் கடற்கரையில் எடுத்த எனது சுற்றுலா புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தேன். அதற்கு வந்த கமெண்ட்கள் என் கவனத்தை பெற்றன.
அதில் எனது மார்பகங்கள் ஒரு வியாபார பொருள் போல பேசப்பட்டு இருந்தது. நான் ஒரு புற்றுநோய் போராளி; நான் மிகவும் போராடி இந்த உறுப்பை உயிருடனும் வைத்திருக்கிறேன்" என்பதைக் குறிப்பிட்டு எனது குறிப்பை தொடங்குகிறேன்.
பிரபலங்களும் மனிதர்கள் தான், அவர்களுக்கும் சாதாரண மனிதர்களைப் போல் அனைத்து உணர்வுகளும் இருக்கும்; அவர்களும் சாதாரண மனிதர்களைப் போல் புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள். சாதாரண மனிதர்களைப் போல் வாழவும் சாகவும் செய்வார்கள். எனவே எவரும் இதுபோன்ற உணர்ச்சியற்ற விமர்சனங்களுக்கு பழகியவர்கள் அல்ல!
மார்பகங்கள் முன்பு போல இருப்பதற்காக ரீ கன்ஸ்ட்ரக்ஷன் சர்ஜரி செய்துள்ளேன். இதைத்தொடர்ந்து இந்த மாதிரியான விமர்சனங்களின்போது தனக்கு உறுதுணையாக நிற்கும் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்; அதில் புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தது, எனது வாழ்வை மாற்றிய ஒரு அனுபவம்; நான் வாழ்கின்ற இப்போதைய வாழ்க்கை முற்றிலும் புதிதானது. நான் முன்பு வாழ்ந்த வாழ்க்கையை போல் இது இல்லை; 7 மாதங்கள் ஆகிவிட்டது.
இப்படி பாதிக்கப்பட்டும் அதிலிருந்து மீண்டு வந்த எனது உடல் மேல் நான் மதிப்பு கொள்கிறேன். அனைத்து புற்றுநோய் போராளிகளுக்கும் என்று குறிப்பிட்டு #breastcancersurvivor என்று ஹேஷ்டேகையும் பதிவிட்டு இருந்தார். மேலும் இதுபோன்ற விமர்சனங்களின் போது தனக்கு உறுதுணையாக இருக்கும் மக்களுக்கு நன்றி” என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.