“உடலை அப்படி ஃபிட்டாக வைத்திருப்பார்... கட்ஸ் கட்ஸா இருக்கும்” - நடிகை அசினுக்கு பிடித்த நடிகர் இவர்தானாம்!
நடிகை அசின் மனம் திறக்கும் நேர்காணல்!
நடிகை அசின், தென்னிந்திய சினிமாவில் தன் திறமையான நடிப்பாலும், கதைத் தேர்வு உள்ளிடவைகளால் தனக்கென தனி இடத்தை உருவாக்கி கொண்டவர். அவர் நடித்த படங்கள் எல்லாம் ஹிட் ஆனது. அதுபோன்ற சுவாரஸ்யமான கதாப்பாத்திரம் இருக்கும் கதைக்கு மட்டுமெதான் ஓகே சொல்வேன் என்றும் பல நேர்காணலில் சொல்லியிருக்கிறார். சினிமாவுக்கு வந்து 14 ஆண்டுகள் ஆனபோதும் 25 படங்களில் மட்டுமே நடித்துள்ளது, இலங்கை சென்றபோது எதிர்கொண்ட சவாலான பிரச்சினை உள்ளிடவைகள் குறித்து மனம் திறக்கிறார் அசின்.
நடிகை அசின் அளித்த பேட்டியில் இருந்து….
கேள்வி:நீங்கள் படங்களில் நடிப்பதற்கு ஏன் ஒரு குறிப்பிட்ட இடைவெளி எடுத்துக்கிறீங்க?
பதில்: நான் நடிக்கும் கதாப்பாத்திரத்தின் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். சும்மா, படம் நடிக்கக் கூடாது என்று நினைப்பேன். நான் நடிக்கும் கதாப்பாத்திரம் சுவாரஸ்யத்துடன் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பேன். அதெற்கென தனிச் சிறப்பு இருக்க வேண்டும். அப்படியான திரைப்படத்தை தேர்வு செய்து நடிப்பேன்.
கேள்வி: தமிழ் கஜினி, இந்தி கஜினி இரண்டு படத்திலும் எந்த ஹீரோ ஆன் ஸ்கீரின்ல நல்ல ஃபிட் ஆக தோற்றம் கொண்டவர்?
பதில்: தமிழ் கஜினி, இந்தி கஜினி இரண்டு படத்திலும் நடித்தவர்கள் சூப்பர் ஹீரோக்கள். இருவரும் அவர்களுடைய ரோலை சிறப்பாக செய்திருப்பார்கள். ஆன் ஸ்கிரீன் ஃபிட்னஸ் யார் சிறந்தவர் என்று கேட்டால், என்னை பொருத்தவரை அமீர் கான் சார்தான். அவர், இந்தி கஜினி படத்திற்கு ரொம்பவே மெனக்கெட்டு தன் உடலை கதாப்பாத்திரத்திற்கு ஏற்றாவாறு மாற்றியிருப்பார். அமீர் கான் சார் ஃபிட்ன்ஸி ஃப்ரீக். அவர்தான் 8-பேக் எல்லாம் மிகச் சரியாக வைத்து, ஆன் ஸ்கிரீனில் சஞ்சய் கதாப்பாத்திரத்திற்கு மிகவும் பொருந்திப்போயிருப்பார்.
கேள்வி: நடிகைகள் அழகாகவும் சிறப்பாகவும் நடித்தால் போதும்னு நினைக்கிறீர்களா? இல்லை அவர்களுக்கென சமூக அக்கறையும் வேண்டும் என்கிறீர்களா?
பதில்: நிச்சயம். நடிகைகளுக்கு சமூக அக்கறை வேண்டும். அழகும் நடிப்பும் மட்டுமே போதாது. ஒரு பப்ளிக் ஃபிகர், பிரபலம், நட்சத்திர முகமாக அறியப்பட தொடங்கிய பிறகு, அவர்களுக்கு சமூக அக்கறையும் அவசியம். ஏனெனில், ஒரு திரைப்பிரபலம் சொல்வதை, பேசுவதை மக்கள் கவனிக்கிறார்கள். நடிகைகளின் ஒவ்வோரு அசையும் பார்வையாளர்களை நேரடியாக இன்ஃபுளுயன்ஸ் செய்யும். ஒவ்வோரு நடிகையும் சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும்.
கேள்வி: டான்ஸ்னா அவ்வளவு பிரியமா? பாட்டு ரிகர்சல் வரை நல்லா ஆடமாட்டங்க போலன்னு நினைச்சேன். ஆனால். ஷாட் எடுக்கும் போது ரொம்ப நல்லாவே ஆடுனாங்கன்னு விஜய் சார் கூட சொல்லியிருக்காங்க.என்ன பாட்டுக்கெல்லாம் டான்ஸ் ஆடுவீங்க?
பதில்: ஆமாம். எனக்கு டான்ஸ்னா ரொம்பவே பிடிக்கும். நான் மூன்று வயதில் இருந்து பரதநாட்டியம் பயிற்சி எடுத்துக்கிட்டேன். இந்திய கிராமிய நடனமும் கற்றுக் கொண்டேன். எனக்கு டான்ஸ் ஆடறதுன்னா ஜாலியாகிடும். இந்த பாட்டுன்லாம் குறிப்பிட்டு சொல்ல முடியாது. எந்த பாட்டாக இருந்தாலும் டான்ஸ் ஆடுவேன். அது, குத்து பாட்டு இருந்தாலும் சரி. கிளாசிகள் ஸ்டெப்ஸ்னாலும் சரி. ஐ லவ் டான்ஸிங்.
கேள்வி: நீங்கள் நடித்ததில் உங்களுக்குப் பிடித்த கேரக்டர் எது?
பதில்: கஜினி கல்பனா கேரக்டர் என்னால் மறக்கவே முடியாது. நான் நடிக்கும்போது ரொம்பவே ரசித்து நடித்தேன்னு சொல்லலாம்.