(Source: Poll of Polls)
Anjali: "எனக்கு நான்கு முறை திருமணம் நடந்துவிட்டது" ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நடிகை அஞ்சலி
எனக்கு ஏற்கனவே மூன்று நான்கு திருமணங்கள் செய்துவைத்துவிட்டார்கள் என்று தனது திருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார் நடிகை அஞ்சலி
அஞ்சலி
ராம் இயக்கிய கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. தொடர்ந்து வசந்தபாலன் இயக்கிய அங்காடி தெரு , எங்கேயும் எப்போதும் , உள்ளிட்டப் படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை பெற்றார். தமிழ் , தெலுங்கு ஆகிய இரு படங்களிலும் பிஸியாக நடித்து வந்த அஞ்சலியின் திருமணம் குறித்து பல்வேறு வதந்திகள் சமூக வலைதளத்தில் பரவியுள்ளன. அஞ்சலி ரகசியம் திருமணம் செய்துகொண்டதாக சில வருடங்கள் முன்பு சமூக வலைதளத்தில் வதந்திகள் பரவின. தற்போது இயக்குநர் ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படத்தில் நாயகியாக நடித்துள்ள அஞ்சலி தனது திருமணம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
என் திருமணத்திற்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது
நேர்காணல் ஒன்றில் தனது திருமணம் குறித்து பேசிய அஞ்சலி இப்படி கூறியுள்ளார் “ சமூக வலைதளங்களில் எனக்கு மூன்று, நான்கு திருமணம் செய்துவைத்து விட்டார்கள். முன்பெல்லாம் நான் ரகசியத் திருமணம் செய்துகொண்டதாக வதந்திகள் வரும்போது எல்லாம் என் வீட்டில் கவலைப் பட்டார்கள் . ஆனால் இப்போழுதெல்லாம் அவர்கள் இதற்கு பழகிவிட்டார்கள்.
இந்த வதந்திகள் எல்லாம் வந்த பிறகு உண்மையாகவே ஒரு பையனை திருமணம் செய்துகொண்டு நான் என் வீட்டார் முன் நின்றால் கூட அவர்கல் நம்ப மாட்டார்கள். என் திருமணத்திற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது, நான் இப்போது சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறேன்.” என்று அஞ்சலில் தெரிவித்துள்ளார்.
கேம் சேஞ்சர் படத்தில் அஞ்சலி
தற்போது அஞ்சலி தெலுங்குவில் கேங்ஸ் ஆஃப் கோதாவரி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கிருஷ்ண சைதன்யா , விவேக் ஷென் , நேகா ஷெட்டி உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். இது தவிர்த்து ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் படத்திலும் அஞ்சலி நடித்து வருகிறார். இப்படம் குறித்த அப்டேட் பற்றி அவரிடம் கேட்டபோது “ கேம் சேஞ்சர் படம் குறித்து பேசுவதற்கு நிறைய இருக்கிறது. ஆனால் இப்போதைக்கு படம் குறித்து பேசுவதற்கு எங்களுக்கு அனுமதி கிடையாது. இப்படம் குறித்து இயக்குநர் ஷங்கர் அல்லது தயாரிப்பாளர் தில் ராஜூ ஆகிய இருவர் தான் ஏதாவது அப்டேட் குடுக்க முடியும். அந்தப் படத்தில் நானும் நடித்திருக்கிறேன். படத்தை விரைவில் வெளியிட திட்டமிட்டு வருகிறார்கள் என்று அஞ்சலி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க : Fahadh Faasil : ஃபகத் ஃபாசிலுக்கு இந்த பாதிப்பு.. தகவல் பகிர்ந்த நடிகர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
TVK : உலக பட்டினி தினத்தை முன்னிட்டு உணவு வழங்கிய தவெக உறுப்பினர்கள்!