" நான் பஹல்காம் சென்றிருந்தேன்.." நடிகை ஆண்டிரியா இன்ஸ்டாகிராம் பதிவு
Pahalgam Attack : பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் குறித்து நடிகை ஆண்டிரியாவின் இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைதளத்தில் கவனமீர்த்து வருகிறது

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. காஷ்மீரின் தெற்கு பகுதியில் உள்ள பஹல்காமை அடுத்த பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் இயங்கும் ரிசார்ட் ஒன்றில், சுற்றுலாப் பயணிகள் கேளிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் சுட்டதில், சுமார் 26 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் ஆண்களை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக, சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இஸ்லாமியர் அல்லாதவர்களை அவர்கள் சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதல் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்திய திரை பிரபலங்கள் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தங்கல் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். நடிகை ஆண்டிரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பஹல்காமில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்
பஹல்காம் தாக்குதல் பற்றி ஆண்டிரியா
ஒரு காலத்தில், நானும் #பஹல்காமில் ஒரு சுற்றுலாப் பயணியாக இருந்தேன்... பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு என் இதயம் துடிக்கிறது ஆனால் இந்த சம்பவத்திற்குப் பிறகு இன்னும் அதிகமான கண்காணிப்பு மற்றும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் காஷ்மீர் மக்களுக்காகவும் என் இதயம் உடைகிறது . குறிப்பாக நமது நாட்டில் பிரிவினைவாதம் அதிகரித்து வரும் நிலையில் நேரத்தில், ஒரு குறிப்பிட்ட மதம்/சமூகம் மீதான வெறுப்பால் திசைதிருப்பப்படாமல் இருப்பது குடிமக்களாகிய நமது கடமை. நான் அடிக்கடி என் கருத்தைப் பேசுவதில்லை, ஆனால் இதைச் சொல்ல வேண்டும் என்று உணர்ந்தேன். இங்கே வெறுப்புக்கு இடமில்லை". என அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram

