abp live

உலக புத்தம் மற்றும் பதிப்புரிமை தினம் முக்கியத்துவம் என்ன?

Published by: ஜான்சி ராணி
abp live

வாசித்தல், பதிப்பித்தல்,அறிவாற்றல் சொத்துகளை பதிப்புரிமை மூலம் பாதுகாக்கும் நோக்கத்தில் ஐ.நா., சார்பில் ஏப்.23ல் உலகபுத்தகம், பதிப்புரிமை தினம் கொண்டாடப்படுகிறது.

abp live

அனைவருக்கும் வாசிப்பு உரிமை, புத்தகங்களின் அவசியம், நூலகங்களின் வளர்ச்சி, படைப்பாளி - பதிப்பாளர் - வாசகர் இணைப்பு, புத்தக வாசிப்பு, அனைத்து மொழிகளிடையே புத்தகப் பரிமாற்றம் உள்ளிட்ட இலக்குகளை நோக்கிச் செல்வதன் ஓர் உலகளாவிய இயக்கமாகவே 1996-ம் ஆண்டு ஏப்.23 நாளில் உலக புத்தக தின கொண்டாட்டம் தொடங்கியது.

abp live

உலகப் புகழ்பெற்ற நாடக ஆசிரியர் வில்லியம் சேக்ஸ்பியர் பிறந்தநாளும் நினைவுநாள் ஏப்ரல் 23, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தொடங்கிய உலக புத்தக தின கொண்டாட்டம் ஆண்டுதோறும் தொடர்கிறது.

abp live

வரலாற்றின் தொடர்ச்சியை அடுத்தடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும், அறிவியல் கண்ணோட்டத்தை பரவலாக்கவும் புத்தக வாசிப்பே நமக்கு பெரிதும் உதவும்.

abp live

சிறு வயதில் இருந்தே குழந்தைகளை புத்தகம் வாசிப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும். வீட்டில் சிறிய இடத்தில் புத்தகங்கள் இருக்கும்படி அமைக்கவும். பெற்றோர்களும் அவசியம் வாசிக்க வேண்டும்.

abp live

வில்லியம் ஷேக்ஸ்பியர் மட்டுமில்லை இலக்கிய உலகில் சிறந்த படைப்பாளர்களான Miguel Cervantes, Inca Garcilaso de la Vega ஆகியோரின் நினைவு தினமும் ஏப்ரல் 23-ம் தேதிதான்.

abp live

UNESCO ஒவ்வொரு ஆண்டும் ’World Book Capital என ஒரு நாட்டை அறிவிக்கும். அதில், 2025-ம் ஆண்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது பிரேசிலில் உள்ள Rio de Janeiro.

abp live

தினமும் சிறிது நேரம் வாசிப்பதற்கு ஒதுக்குவது நல்லது. அறிவுசார்ந்த படைப்புகளை அவர்கள் அனுமதில் இல்லாமல் பயன்படுத்துவதும் தவறுதான்.

abp live

இனிய உலக புத்தம் மற்றும் பதிப்புரிமை தின வாழ்த்துகள்!