Watch video : டயட்ல இருக்கேன்.. விஜய் சேதுபதி டயட்டை பத்தி அவரே சொல்றாரு மக்களே.. வைரல் வீடியோ..
விஜய் சேதுபதி நடிப்பில் விரைவில் மாமனிதன், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வர இருக்கின்றனர்.
நடிகர் விஜய் சேதுபதி மக்கள் செல்வனாக ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். இவர் தேர்ந்தெடுக்கும் கேரக்டர்கள் இவரை எப்போதும் புகழின் உச்சியிலேயே வைத்திருக்கிறது. வில்லன், தாத்தா, தாதா, திருநங்கை என இவர் தேர்ந்தெடுக்கும் கேரக்டர்கள் இவரை தொடர்ந்து கோலிவுட்டின் மக்கள் செல்வனாக வைத்துள்ளது.
நடிப்பில் மட்டுமல்லாமல் திரைக்கு பின்னாலும் தனக்கென தனி பாணியை வைத்திருக்கு விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் வெர்சட்டைல் நடிகர் என்னும் அங்கீகாரத்தை குறைந்த காலத்திலேயே பெற்றவர். இந்தநிலையில், விஜய் சேதுபதி நடிப்பில் விரைவில் மாமனிதன், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வர இருக்கின்றனர்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடித்திருக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் உருவாகி உள்ளது. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தை நயன் - விக்னேஷ் ஆகியோரின் “ரௌடி பிக்சர்ஸ்” நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
இந்த படத்திற்கு முன்பில் இருந்தே நடிகர் விஜய் சேதுபதியும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் மிகவும் நெருக்கம் என்பதால் அவ்வபோது இருவரும் ஒன்றாக வெளியே பயணிப்பது அதிகம். அதேபோல், தற்போது, விஜய் சேதுபதி எங்கோ அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கார். அப்பொழுது, இயக்குநர் விக்னேஷ் சிவன் விஜய் சேதுபதி சாப்பிடுவதை வீடியோ எடுத்துக்கொண்டே "என்ன அண்ணா டிஷ் ரொம்ப கம்மியா இருக்கு. இது போதுமா" என்று கேட்கிறார்.
View this post on Instagram
அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, "ஆமா விக்கி, டையட்ல இருக்கேன் என்று கூற, அப்படியே வீடியோ பின்னால் செல்கிறது. அதன்பிறகு அங்கு முழுவதும் கிட்டத்தட்ட 43 வகையான உணவுகள் டேபிளில் பரிமாறப்பட்டிருந்தது. விஜய் சேதுபதிக்கு அருகில் மாஸ்டர் செப் புகழ் மணிகண்டன் ஒவ்வொரு உணவாக பரிமாறி கொண்டு இருந்தார். தொடர்ந்து விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி சாப்பிடுவதை கலாய்த்து கொண்டே இருக்கே, இதை எதையும் கண்டுகொள்ளாமல் விஜய் சேதுபதி சாப்பிடுகிறார். தற்போது, இந்த வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்