மேலும் அறிய
Advertisement
Thalapathy 69: விஜய் நடிக்கும் தளபதி 69 படத்தை இயக்குவது அட்லீயா? ஏ.ஆர். முருகதாஸா?
Thalapathy69: விஜய்யின் அரசியல் பயணத்துக்கு முன்னதாக எடுக்கும் படம் ஏ.ஆர். முருகதாஸ் எடுத்தால் சரியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
Thalapathy69: விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில், அவரது கடைசி படமாக இருக்கும் தளபதி69 படத்தை யார் இயக்குவதுஜ் என்ற விவாதம் எழுந்துள்ளது.
தளபதி 69:
லியோ படத்திற்கு பிறகு, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 68 படமான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என்ற படத்தில் விஜய் நடித்து வருகிறார். விஜய் நடிக்கும் கோட் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், புதிதாக கட்சி தொடங்குவதாக விஜய் அறிவித்தார்.
கடந்த 2ம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக விஜய் அறிவித்தார். அரசியலில் பயணித்தால் நடிப்பதை நிறுத்திக் கொள்வேன் என்றும் விஜய் அறிவித்திருந்தது அவரது ரசிகர்களையும், தமிழ் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அரசியலுக்கு வந்தால் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று விஜய் தெரிவித்துள்ளதால், தளபதி 69 படத்தை யார் இயக்குவார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அட்லீயா? ஏ.ஆர்.முருகதாஸா?
தளபதி 69 படம் குறித்த அறிவிப்பு மார்ச் மாதத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கும் நிலையில், படத்தில் எந்தவித முரண்பாடுகளும் இருக்க கூடாது என்பதில் விஜய் தரப்பு கவனமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரம், விஜய்யின் கடைசி படத்தை யார் இயக்குவது, தயாரிப்பது என்ற விவாதம் எழுந்துள்ளது. அனேகமாக விஜய்யின் கடைசி படத்தை அட்லீ இயக்கினால் சரியாக இருக்கும் என்ற பேச்சும், அதேநேரம் ஏ.ஆர். முருகதாஸ்க்கும் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்ற பேச்சும் அடிப்படுகிறது.
விஜயகாந்த் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னதாக ரமணா படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியது, அவரது பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. அதேபோல் தெலுங்கில் சிரஞ்சீவி கட்சி தொடங்குவதற்கு முன்பாக முருகதாஸ் இயக்கிய படம் நல்ல பெயரை பெற்று தந்தது. விஜய் நடித்த கத்தி, துப்பாக்கி, சர்க்கார் உள்ளிட்ட அரசியல் பேசும் படங்களை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய நிலையில், அந்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதனால், விஜய்யின் அரசியல் பயணத்துக்கு முன்னதாக எடுக்கும் படம் ஏ.ஆர். முருகதாஸ் எடுத்தால் சரியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதேநேரம் விஜய் நடித்த மெர்சல், தெறி, பிகில் உள்ளிட்ட படங்களை அட்லீ இயக்கி உள்ளார். இந்த படங்கள் வெற்றிப்பெற்று விஜய்க்கு ஹிட் அடித்தன. அந்த வரிசையில் விஜய்யின் கடைசி படத்தை அட்லீ இயக்கினால் நன்றாக இருக்கும் என பேசப்படுகிறது.
மேலும் படிக்க: Lal Salaam: லால் சலாம் ரஜினிகாந்த் படமா? விஷ்ணு - விக்ராந்த் படமா? ஐஸ்வர்யா நச் பதில்!
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
கிரிக்கெட்
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion