மேலும் அறிய
Advertisement
Lal Salaam: லால் சலாம் ரஜினிகாந்த் படமா? விஷ்ணு - விக்ராந்த் படமா? ஐஸ்வர்யா நச் பதில்!
Lal Salaam: "லால் சலாம் படத்தில் வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. வன்முறைகள் இருந்தால் படம் ஹிட் ஆகும் என நினைத்து எடுத்தீர்களா..?"
Lal Salaam: லால் சலாம் படம் ஹிட் ஆக வேண்டும் என்பதற்காக ரஜினிக்கு வன்முறை காட்சிகள் வைக்கப்பட்டதா என்ற கேள்விக்கு படத்தின் இயக்குநரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதிலளித்துள்ளார்.
ரஜினிகாந்த் கேமியோவில் லால் சலாம்:
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் திரைக்கு வந்து ரசிகர்கள் கொண்டாடி வரும் படம் லால் சலாம். நீண்ட இடைவெளிக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கும் படம் என்பதாலும், கிரிக்கெட் சார்ந்த உண்மை கதை என்பதாலும், படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்கிறார் என்பதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.
இது தவிர படத்தில் முக்கிய கேரக்டர்களில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால், நிரோஷா, தம்பி ராமையா, செந்தில் உள்ளிட்டோர் நடித்து அதகளப்படுத்தியுள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள லால் சலாம் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இன்று முதல் திரைக்கு லால் சலாம் வந்துள்ளது. படத்தை பார்த்த ரசிகர்களின் கூஸ்பம்ப் ஏற்படுத்தும் ரஜினியின் நடிப்பை பார்த்து கொண்டாடி வருகின்றனர்.
யாருடைய படம்?
இந்த நிலையில் லால் சலாம் படம் குறித்து அதன் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு நச் பதிலை ஐஸ்வர்யா அளித்துள்ளார். முதலில், லால் சலாம் ரஜினிகாந்த் படமா? அல்லது விஷ்ணு - விக்ராந்த் படமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ”லால் சலாம் கதை சார்ந்த படம். அது எந்த ஒரு நடிகராகவும் எடுக்கப்பட்ட படம் இல்லை” என்றார்.
ஒரு மகளாக சூப்பர் ஸ்டாரை வைத்து படத்தை இயக்குவது எந்த மாதிரியான உணர்வை கொடுத்தது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ” ஒரு மகளாக உணர்ச்சிவசப்பட்டேன். ஒரு இயக்குநராக கனவு கண்டது போல் இருந்தது” என்றார். ரஜினிகாந்த் இஸ்லாமியர் கேரக்டரில் நடித்தது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு, “முதல் முறையாக அவரது படங்களில் முஸ்லீம் ரோலில் நடித்துள்ளார். அது மிகவும் ஸ்பெஷலானது” என்றார்.
மீண்டும் கம்பேக்?
லால் சலாம் படத்தில் வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. வன்முறைகள் இருந்தால் படம் ஹிட் ஆகும் என நினைத்து எடுத்தீர்களா? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, “படம் ஹிட் ஆகும் என்ற நோக்கத்தில் வன்முறை வைக்கவில்லை. படத்திற்கு தேவையானது எதுவோ அதுதான் வைத்துள்ளோம். கதைக்கு ஏற்றார்போல் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன” என்றார். பெண் இயக்குநராக இருக்க சந்திக்கும் சவால்கள் என்ன என்ற கேள்வி வைக்கப்பட்டது. அதற்கு, “ எனது கைகள் கட்டப்படவில்லை. என்னால் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பறக்க முடியும். அதனால், என்னால் மீண்டும் கம்பேக் கொடுக்கப்பட்டது” என்றார்.
கடைசியாக படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு அதிக சம்பளமாக அல்லது உங்களுக்கு அதிக சம்பளா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “ அதிக சம்பளம் என்பதை எதை கற்று கொள்கிறோம் என்பதை பொறுத்து இருக்கு. அப்படி பார்க்கும்போது லால் சலாம் படத்தின் மூலம் அதிகமாக அதிகமாக கற்றுக் கொண்டது நான் தான். ஆனால், சம்பளத்தில் அதிகம் பெற்றது சூப்பர் ஸ்டார் தான்” என கூறியுள்ளார்.
மேலும் படிக்க: Lal Salaam Review: ரஜினிகாந்தின் மாஸ் கேமியோ! ஐஸ்வர்யா இயக்கம் எப்படி? “லால் சலாம்” திரைப்பட விமர்சனம்!
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
கிரிக்கெட்
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion