(Source: Poll of Polls)
Actor Suriya : ரூ.25 ஆயிரம் கடனுக்காக நடிக்க வந்த சூர்யா..கிண்டல் செய்த நண்பர்கள்..இன்னைக்கு யார் தெரியுமா?
சூர்யா, தமிழ் சினிமாவின் டாப் 10 நடிகர்களில் ஒருவர். நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என பல திறமைகளை கொண்டிருக்கும் அவர் ஒரு நேர்காணலில் தான் நடிக்க வந்த கதையை பேசியிருப்பார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா ஒரு நேர்காணலில் தான் எப்படி நடிக்க வந்தேன் என தெரிவித்திருப்பார். அதனைப் பற்றி காணலாம்.
தமிழ் சினிமாவின் திரையுலக மார்க்கண்டேயன் என அழைக்கப்படுபவர் சிவகுமார். 80 வயதை தாண்டி விட்டாலும் இன்றும் கூட சுறுசுறுப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் அவருக்கு சூர்யா, கார்த்தி என இரு மகன்களும், பிருந்தா என்ற மகளும் உள்ளனர். அப்பாவை போல இல்லாவிட்டாலும் சூர்யா, கார்த்தி இருவரும் தமிழில் தனக்கென தனியிடம் பிடித்துள்ளனர். சூர்யா 1997 ஆம் ஆண்டு வெளியான நேருக்கு நேர் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு தியா, தேவ் என இரு குழந்தைகள் உள்ளனர். சூர்யா தற்போது 44வது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கும் இப்படம் தீபாவளிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கங்குவா படத்தில் திஷா பதானி, பாபி தியோல், கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் தயாரித்துள்ள நிலையில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படம் 3டி தொழில் நுட்பத்தில் 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.
சூர்யா, தமிழ் சினிமாவின் டாப் 10 நடிகர்களில் ஒருவர். நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என பல திறமைகளை கொண்டிருக்கும் அவர் ஒரு நேர்காணலில் தான் நடிக்க வந்த கதையை பேசியிருப்பார். அதாவது, “ரூ. 25 ஆயிரம் கடன் எங்களுக்கும் இருந்தது. அதை திருப்பிக் கொடுக்க முடியாத சூழலில் உடனே எடுத்த முடிவு தான் நடிக்கலாம் என்பது. என் நண்பர்கள் 4,5 பேரிடம் சென்று நான் நடிக்க போகிறேன் என சொன்னேன். அதைக் கேட்டு எல்லோரும் சிரித்தார்கள். அப்போது நான் பல்லில் கிளிப் எல்லாம் போட்டிருப்பேன். மேலும் ஒரு அம்பத்தூரில் ஒரு கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தேன்.
தினமும் அங்கிருந்து பழைய மகாபலிபுரம் சாலை வரை பயணம் செய்து கொண்டிருப்பேன். எப்போது என்னை பார்த்து சிரித்தார்களோ, என்னை ஒரு அழுத்தத்திற்கு தள்ளினார்களோ அப்போது எனது குடும்பத்திற்காக இல்லாவிட்டாலும் நடிகனாக வேண்டும் என்று முடிவெடுத்தேன் . அது எனக்குள் ஒரு சின்ன சவாலாக இருந்தது. நான் இதை பண்ண மாட்டேன் என யாராவது சொன்னால் அதை நான் செய்வேன். விளையாட்டா ஆரம்பித்தது தான் நான் நடிகரானது” என அவர் தெரிவித்திருப்பார்.