Actor Soori: கேரவன் உள்ளே என்ன இருக்கு? .. கேள்வி கேட்ட நடிகர் சூரிக்கு சிறுவன் கொடுத்த “ஷாக்” பதில்..!
பொதுவாக சினிமா ஷூட்டிங் நடைபெறும் இடங்களில் சகல வசதிகளும் கொண்ட கேரவன் வாகனம் நிறுத்தப்பட்டிருப்பதை காணலாம்.
தான் இருந்த கேரவன் வாகனத்தை சுற்றிப் பார்க்க சிறுவர்கள் ஆசைப்பட்டு கேட்ட நிலையில், அவர்களை அனுமதித்த நடிகர் சூரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
பொதுவாக சினிமா ஷூட்டிங் நடைபெறும் இடங்களில் சகல வசதிகளும் கொண்ட கேரவன் வாகனம் நிறுத்தப்பட்டிருப்பதை காணலாம். பிரபலங்கள் ஓய்வு எடுக்கவும், மேக்கப் மற்றும் உடை மாற்றுவது உள்ளிட்ட பல விஷயங்களை செய்யவும் இந்த வாகனம் மிகவும் உதவிகரமாக இருக்கும். தங்களை சந்திக்க வருபவர்களையும் உபசரிக்கவும் கேரவன் சிறந்த இடமாக உள்ளது. காலப்போக்கில் இது அரசியல் பயணம் மற்றும் பாதயாத்திரை போன்ற நிகழ்வுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பல பிரபலங்கள் தங்களுக்கென்று சொந்தமாகவே கேரவன் வைத்துள்ளனர்.
இதனை வெளியே இருந்து பார்க்கும் ரசிகர்களுக்கு அப்படி அந்த வண்டிக்குள் என்னதான் இருக்கிறது என்பதை காண வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்படும். சில திரைப்படங்களில் ஒரு சில காட்சிகளில் கேரவன் வண்டி உள்ளே இப்படித்தான் இருக்கும் என காட்டப்படிருந்தாலும் நாமும் ஒருமுறை உள்ளே சென்று பார்க்க மாட்டோமா என்ற ஆசை தான் ஏற்படும். இப்படியான நிலையில் ஷூட்டிங்கிறாக சென்ற நடிகர் சூரி தனது கேரவனை பார்க்க ஆசைப்பட்ட சிறுவர்களின் எண்ணத்தை நிறைவேற்றி ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளார்.
தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமான சூரி முன்னணி நடிகர்களாக ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், ஜெயம் ரவி தொடங்கி பலரின் படங்களிலும் காமெடி வேடத்தில் நடித்து விட்டார். நடப்பாண்டு மார்ச் மாதம் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை படத்திலும் ஹீரோவாக அசத்தியிருந்தார். இந்த படத்தின் 2ஆம் பாகத்துக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், மறுபக்கம் நகைச்சுவை கேரக்டர்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
மேலும் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய பெயரிடப்படாத திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடிகர் சூரி நடிக்கும் நிலையில் தன்மையான கதாபாத்திரத்தில் சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் நடிக்கிறார்கள். இப்படி சினிமாவில் பிஸியாக இருக்கும் அவர், ஒரு ஷூட்டிங் ஒன்றிற்காக சென்ற இடத்தில் அங்குள்ள சிறுவர், சிறுமியர்கள் கேரவனை சுற்றிப் பார்க்க ஆசைப்பட்டார்கள். அவர்களை சந்தித்த சூரியிடம், “அண்ணா ஒரே ஒரு வாட்டின்னா..ப்ளீஸ்னா” என சொல்கிறார்கள்.
உள்ளே என்ன இருக்கிறது என சூரி கேட்க, அதற்கு ஒரு சிறுவன் “பெட்ரூம்” என சொல்கிறான். இதைக்கேட்டு ஷாக்கான சூரி, உள்ளே இருக்கிறது மேக்கப் ரூம் என சொல்லி, அனைவரையும் உள்ளே சென்று சுற்றிக்காட்டுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் சூரியின் செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: Jovika - Vichithra: படிப்பு முக்கியமே இல்லை சீறிய ஜோவிகா... வாங்கி கட்டிக்கொண்ட விசித்ராவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நெட்டிசன்கள்..!