Sivakarthikeyan: திட்டமிட்டு மறைக்கப்படுகிறதா சிவகார்த்திகேயன் வெற்றி? - விமர்சனத்திற்கு எதிராக லிஸ்ட் விட்ட ரசிகர்கள்! என்ன நடந்தது?
நடிகர் சிவகார்த்திகேயனின் வெற்றி திட்டமிட்டு மறைக்கப்படுவதாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் குற்றம் சாட்டி வருகின்றனர்.
நடிகர் சிவகார்த்திகேயனின் வெற்றி திட்டமிட்டு மறைக்கப்படுவதாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இளைஞர்களை கவர்ந்த சிவகார்த்திகேயன்
சின்னத்திரையில் தனது மிமிக்ரி மற்றும் சிறப்பான தொகுப்பாளராக ரசிகர்களை கவர்ந்த சிவகார்த்திகேயன், 2012 ஆம் ஆண்டு மெரினா படத்தின் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து அவருக்கு 2013 ஆம் ஆண்டு வெளியான எதிர்நீச்சல் படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் படம் நடித்து வருகிறார்.
தொடரும் சர்ச்சை
சிவகார்த்திகேயனின் திறமையை 3 படத்தில் நடித்தபோது சரியாக அடையாளம் கண்டுக்கொண்டார் நடிகர் தனுஷ். அவர் தான் தனது தயாரிப்பில் எதிர்நீச்சல், காக்கிச்சட்டை ஆகிய படங்களை சிவகார்த்திகேயனை வைத்து தயாரித்தார். இப்படியான நிலையில் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இதுகுறித்து இருவருமே வெளிப்படையாக பேசவில்லை என்றாலும் காலப்போக்கில் இப்பிரச்சினை மறக்கடிக்கப்பட்டது. அவ்வப்போது தனுஷ், சிவகார்த்திகேயன் விரிசல் குறித்து கேள்விகள் எழுவது தொடர்கதையாகி வருகிறது.
இதன் உச்சமாக 2018 ஆம் ஆண்டு டிசம்பரில் தனுஷ் நடித்த மாரி 2 படம் வெளியானது. இதற்கு போட்டியாக சிவகார்த்திகேயன் தயாரித்து சிறப்பு தோற்றத்தில் நடித்த ‘கனா’ படம் வெளியானது. இந்த படம் தனுஷூக்கு போட்டியாக வெளியிடப்பட்டதாக சொல்லப்பட்டது. இதற்கிடையில் கடந்தாண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இதனால் சிவகார்த்திகேயன் மார்க்கெட் நிலவரம் உயர்ந்தது.
இதன் பின்னர் கடந்தாண்டு தீபாவளிக்கு பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே ப்ரின்ஸ் படம் வெளியாகி தோல்வியை தழுவியது. இதனால் மீண்டும் சிவா குறித்து சர்ச்சை கிளம்ப தொடங்கியது. அவர் தனியாக படம் ரிலீஸ் செய்தால் தான் வெற்றி பெறுகிறார். போட்டிப் படங்கள் வரும் போது சிவகார்த்திகேயன் படங்கள் தோல்வியடைந்து விட்டதாக விமர்சனம் வெளியானது.
இந்த நிலையில் வரும் தீபாவளிக்கு சிவா நடிப்பில் அயலான் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே தீபாவளிக்கு கார்த்தியின் ‘ஜப்பான்’, லாரன்ஸ் நடிக்கும் ஜிகர்தண்டா 2 படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கண்டிப்பா சிவகார்த்திகேயன் படம் தோல்வி அடையும் என சிலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்தனர். இதனைக் கண்டு அவரது ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.
லிஸ்ட் போட்ட ரசிகர்கள்
போட்டி போட்டு சிவகார்த்திகேயன் படம் ஜெயித்தது இல்லையா என லிஸ்ட் ஒன்றையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
சிவகார்த்திகேயன் படம் | எதிர்படங்கள் |
எதிர்நீச்சல் | சூதுகவ்வும் |
ரஜினி முருகன் | கதகளி, கெத்து, தாரை தப்பட்டை |
ரெமோ | தேவி, ரெக்க |
வேலைக்காரன் | சக்கப்போடு போடு ராஜா |
கனா | மாரி 2, சிலுக்குவார்பட்டி சிங்கம், அடங்க மறு |
ஆனால் இவற்றை எல்லாம் விட்டு விட்டு மிஸ்டர் லோக்கல் (vs மான்ஸ்டர்) , ஹீரோ (vs தம்பி), ப்ரின்ஸ் (vs சர்தார்) ஆகிய படங்களை மட்டுமே சொல்வது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.