Amaran Release: ரசிகர்களே! சிவகார்த்திகேயனின் அமரன் எப்போது ரிலீஸ்? 5 மணிக்கு அறிவிப்பு
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் படம் எப்போது வெளியாக உள்ளது என்று இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது.
தமிழ் திரையுலகின் முக்கியமான கதாநாயகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக தனது வாழ்வைத் தொடங்கிய சிவகார்த்திகேயன் தன்னுடைய நகைச்சுவையான பேச்சு, நடிப்பு மூலமாக சிறந்த நடிகராக உருவெடுத்தார்.
சிவகார்த்திகேயனின் அமரன்:
காமெடி படங்களைத் தேர்வு செய்து நடித்து வந்த சிவகார்த்திகேயன், குடும்பங்கள் கொண்டாடும் நடிகராக உயர்ந்த பிறகு தனது ரூட்டை ஆக்ஷன் பக்கம் மாற்றியுள்ளார். அந்த வகையில், அவர் தற்போது நடித்துள்ள படம் அமரன். தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறாக இந்த படம் உருவாகியுள்ளது.
காமெடி, ஆக்ஷன், குடும்பப் பாங்கான படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் முதன்முறையாக படம் முழுக்க ஆக்ரோஷமான ராணுவ வீரராக இந்த படத்தின் மூலமாக நடித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது,
#Amaran release date announcement today at 5 p.m.#AmaranReleaseDate#Ulaganayagan #KamalHaasan #Sivakarthikeyan #SaiPallavi #RajkumarPeriasamy
— Raaj Kamal Films International (@RKFI) July 17, 2024
A Film by @Rajkumar_KP
@ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran pic.twitter.com/vfAGsUqmrw
ரிலீஸ் எப்போது?
தற்போது, அமரன் படம் எப்போது வெளியாகும்? என்று இன்று மாலை 5 மணிக்கு படக்குழு அறிவிக்க உள்ளது. நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் அமரன் படத்தை தயாரிக்கின்றனர். சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தை ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார்.
இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகை சாய் பல்லவி முதன்முறையாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்துள்ளார். புவன் அரோரா, ராகுல் போஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் இதுவரை நடித்துள்ள படங்களில் இந்த படம்தான் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள படம் ஆகும். இந்த படத்திற்கு சாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலைவாணன் படத்தொகுப்பு செய்துள்ளார்.
அடுத்தடுத்து எஸ்.கே.பிசி!
தமிழ் சினிமாவில் நடிகர் விஜய், அஜித் ஆகியோருக்கு பிறகு அடுத்த தலைமுறை நடிகர்களில் முதன்மையானவராக வளர்ந்து நிற்பவராக சிவகார்த்திகேயன் உள்ளார். இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார். மேலும், சிபி சக்கரவர்த்தி, சுதா கொங்கரா ஆகியோர் இயக்கத்திலும் அடுத்தடுத்து நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: திரைக்கதை ஆசிரியராகும் பிரபல விமர்சகர்... ஐரா இயக்குநரின் அடுத்த படத்தின் அப்டேட்
மேலும் படிக்க: Purananooru update: சிவகார்த்திகேயன் காட்டில் மழை! கைமாறியது சூர்யாவின் படம்... சுதா கொங்கரா எடுத்த அதிரடி முடிவு!