மேலும் அறிய

திரைக்கதை ஆசிரியராகும் பிரபல விமர்சகர்... ஐரா இயக்குநரின் அடுத்த படத்தின் அப்டேட்

பிரபல சினிமா விமர்சகராக அறியப் படும் பரத்வாஜ் ரங்கன் ஐரா படத்தின் இயக்குநர் சர்ஜூன் இயக்கும் படத்திற்கு திரைக்கதை எழுத உள்ளார்.

பரத்வாஜ் ரங்கன்

பிரபல நாளிதழ்களில் சினிமா விமர்சனங்கள் எழுதுவதில் தனது விமர்சனப் பயணத்தை தொடங்கியவர் பரத்வாஜ் ரங்கன். கடந்த 2005 ஆம் ஆண்டு சிறந்த திரைப்பட விமர்சகருக்கான தேசிய விருது இவருக்கு வழங்கப் பட்டது. தி இந்து , ஃபிலிம் கம்பேனியன் போன்ற பிரபல ஊடகங்களில் திரைப்பட விமர்சனங்கள் மற்றும் திரை பிரபலங்களை நேர்காணல் செய்துள்ளார். தற்போது கலாட்டா பிளஸ் யூடியுப் சேனலில் திரைப்பட விமர்சனம் மற்றும் நேர்காணல்கள் செய்து வருகிறார். ஒரு படத்தை கதையம்சத்துடனும் தொழில்நுட்ப ரீதியாகவும் புரிந்துகொள்ளும் விதமாக இவரது விமர்சனங்கள் இருந்து வருகின்றன. மேலும் பல்வேறு இயக்குநர்கள் , நடிகர்கள் மற்றும் பிற தொழில்நுட்ப கலைஞர்களுடனான இவரது நேர்காணல்கள் சினிமாவிற்கு வருவதற்கு ஆசைப்படுபவர்களுக்கு மிகப்பெரிய திறப்பாக இருக்கின்றன. மணிரத்னமின் படைப்புலகம் பற்றி பரத்வாஜ் ரங்கன் எழுதிய புத்தகம் அவரது குறிப்பிடத் தகுந்த பணிகளில் ஒன்று.  விமர்சகராக வலம் வந்த பரத்வாஜ் ரங்கன் தற்போது திரைக்கதை ஆசிரியராக அவதாரம் எடுக்க இருக்கிறார்.

திரைக்கதை ஆசிரியராக அவதாரம் எடுக்கும் பரத்வாஜ் ரங்கன்

சிங்கம் 2 , சர்தார் , சர்தார் 2 , ரன் பேபி ரன் , தண்டட்டி , லப்பர் பந்து உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ள நிறுவனம் பிரின்ஸ் பிக்ச்சர்ஸ். தற்போது பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிக்க இருக்கும் புதிய படத்திற்கு பரத்வாஜ் ரங்கன் திரைக்கதை எழுத இருக்கிறார். நயன்தாரா நடித்த ஐரா படத்தை இயக்கிய சர்ஜூன் இந்தப் படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தின் படக்குழுவினர் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளார். 

இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் நயன்தாரா மண்ணாங்கட்டி என்கிற படத்தில் நடித்து வருகிறார். பிரபல யூடியுபர் ட்யூட் விக்கி இப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் மீண்டும் ஒரு முறை நயன்தாராவுடன் பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் இணைந்துள்ளதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் 

மேலும் படிக்க : Indian 2 Box Office :என்ன ஆனது இந்தியன் 2வின் 4வது நாள் வசூல் நிலவரம்? உயர்வா? சரிவா?

Viduthalai 2 First look: மீண்டும் வருகிறார் பெருமாள் வாத்தியார்! நாளை வெளியாகிறது 'விடுதலை 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal Cyclone LIVE:  ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கைFengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!மழைக்கான ஏற்பாடுகள் என்ன? கலெக்டர் கொடுத்த HINT! துண்டு சீட்டில் எழுதிய அமைச்சர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal Cyclone LIVE:  ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
ஃபெஞ்சல் புயல் : சுளுக்கு எடுக்கும் சூறாவளி காற்று... சாலையில் விழும் மரங்கள்; ஸ்தம்பிக்கும் ECR
ஃபெஞ்சல் புயல் : சுளுக்கு எடுக்கும் சூறாவளி காற்று... சாலையில் விழும் மரங்கள்; ஸ்தம்பிக்கும் ECR
Embed widget