Thalapathy66 Update: 22 ஆண்டுகளுக்குப் பின் ஒரு ஜாய்னிங்.. விஜயின் அண்ணனாக களமிறங்கும் பிரபல நடிகர்.. இதோ தளபதி 66 அப்டேட்..
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் ‘தளபதி 66’ படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடிகர் ஷ்யாம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
![Thalapathy66 Update: 22 ஆண்டுகளுக்குப் பின் ஒரு ஜாய்னிங்.. விஜயின் அண்ணனாக களமிறங்கும் பிரபல நடிகர்.. இதோ தளபதி 66 அப்டேட்.. Actor Shaam to play Vijay brother in Thalapathy66 Thalapathy66 Update: 22 ஆண்டுகளுக்குப் பின் ஒரு ஜாய்னிங்.. விஜயின் அண்ணனாக களமிறங்கும் பிரபல நடிகர்.. இதோ தளபதி 66 அப்டேட்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/23/0b769f41799a42df48561327c13183d6_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவான ‘பீஸ்ட்’ திரைப்படம் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியானது. இந்தப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால், விஜயின் அடுத்த படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
அண்ணனாக நடிகர் ஷ்யாம்
‘தளபதி 66’ என்ற பெயரில் அழைக்கப்படும் இந்தப் படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது. தற்போது படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடிகர் ஷ்யாம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக இந்த அண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்க 80-களில் பிரபல நடிகராக வலம் வந்த, மோகனிடம் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும், ஆனால் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
இதன் மூலம் குஷி படத்திற்கு நடிகர் ஷ்யாம் விஜயுடன் நடிக்கிறார் என்னும் தகவல் வெளியாகியுள்ளது
தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக வலம் வரும், தில் ராஜூ தயாரிப்பில், தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான தோழா, நடிகர் மகேஷ் பாபுவின் ‘மகரிஷி’ உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குநர் வம்சி இந்தப்படத்தை இயக்குகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்தப்படத்தில் நடிகர் சரத்குமார், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். தெலுங்கில் பிரபல இசையமைப்பாளராக வலம் வரும் தமன் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
செண்டிமெண்டிற்கு முக்கியத்துவம்
விஜய் 66 , செண்டிமெண்ட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட உள்ளதாக சில நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக படம் குறித்து பேசிய இயக்குநர் வம்சி “படத்தில் மனித உறவுகள் மற்றும் , உணர்ச்சிகள் இரண்டிற்கும் இடமளித்து கதையை உருவாக்கியுள்ளேன். மேலும் விஜய் சாரின் ரசிகர்கள் மற்றும் அவரின் ஸ்டார் வேல்யூவையும் மனதில் வைத்துதான் கதை எழுதியிருக்கிறேன் “ என தெரிவித்திருந்தார்.
தயாரிப்பாளர் கூறும்போது, “ 20 வருடங்களுக்கு பிறகு ஒரு நல்ல கதையை கேட்டிருக்கிறேன் என நடிகர் விஜய் என்னிடம் கூறினார். தளபதி 66 படம் மார்ச் மாதம் தொடங்கும். தீபாவளி அல்லது பொங்கலுக்கு படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)