மேலும் அறிய

Divya Sathyaraj: அரசியலில் குதிக்கிறார் நடிகர் சத்யராஜ் மகள் - எந்த கட்சியில் சேர்கிறார்? அவரே தந்த பதில்!

பாரதிய ஜனதா கட்சியில் இணைவது குறித்து நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் விளக்கமளித்துள்ளார்

மதத்தைப் போற்றும் கட்சியில் இணைவதில் தனக்கு விருப்பம் இல்லை என்று திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார்

திவ்யா சத்யராஜ்

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஊட்டச்சத்து  நிபுனர்களில் ஒருவர். மகிழ்மதி என்கிற தனியார் நிறுவனத்தின்  மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். மேலும் மணிப்பூர் , இலங்கை உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து ஊட்டச்சத்து குறைபாட்டால், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார். அரசியல் ரீதியாக சமத்துவத்தை முன்வைத்தே தனது கருத்துக்களை பொது தளங்களில் பேசி வருபவர். பெண்களுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருப்பதால் தான் சனாதன தர்மத்தை மறுக்கிறேன் என்று கடந்த ஆண்டு இவர் தெரிவித்த கருத்து கவனம் பெற்றது.

பாரதிய ஜனதா கட்சியில் இணையப் போகிறாரா திவ்யா?

அரசியலில் தனது ஈடுபாடு இருப்பதாகவும் அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகவும் பல்வேறு முறை வெளிப்படுத்தி இருக்கிறார் திவ்யா. இப்படியான நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இருந்து அவருக்கு அழைப்பு வந்ததாகவும் பாஜகவில் அவர் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகின. இதனைத் தொடர்ந்து தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்

மதத்தைப் போற்றும் கட்சியில் இணைய விருப்பமில்லை

வணக்கம்! எனக்கு அரசியலில் ஆர்வம் உண்டு என்று சில பத்திரிக்கை நண்பர்களிடம் சொல்லியிருந்தேன். அதற்குப் பிறகு எல்லோரும் என்னைக் கேட்கும் கேள்விகள் "நீங்கள் எம்.பி.ஆவதற்காக அரசியலுக்கு வருகிறீர்களா? ராஜ்யசபா எம்.பி ஆகனும்கற ஆசை இருக்கா? மந்திரி பதவி மேல் ஆர்வம் உள்ளதா? சத்யராஜ் சார் உங்களுக்குப் பிரச்சாரம் செய்வாரா?" இப்படிப் பல கேள்விகள்.

நான் பதவிக்காகவோ, தேர்தலில் வெல்வதற்காகவோ அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைக்கவில்லை. மக்களுக்காக வேலை செய்வதற்காகத் தான் அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைக்கிறேன். நான் களப்பணிகள் செய்ய ஆரம்பித்து சில வருடங்கள் ஆகிறது. 'மகிழ்மதி இயக்கம்' என்ற அமைப்பை மூன்று வருடங்களுக்கு முன் ஆரம்பித்தேன். அந்த அமைப்பின் மூலம் தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டிற்குக் கீழ் இருக்கும் மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவு வழங்கப்படுகிறது.

இன்னொரு முக்கியமான விஷயம். நான் தனிக்கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை. வரும் தேர்தலில் போட்டியிட எனக்கு ஒரு கட்சியிலிருந்து அழைப்பு வந்தது உண்மைதான். ஆனால், எந்த ஒரு மதத்தைப் போற்றும் கட்சியுடனும் இணைய எனக்கு விருப்பம் இல்லை. எந்தக் கட்சியுடன் இணையப் போகிறேன் என்பதை தேர்தல் முடிந்தவுடன் அறிவிப்பேன். புரட்சித் தமிழன், தோழர் சத்யராஜின் மகளாகவும், ஒரு தமிழ் மகளாகவும், தமிழ்நாட்டின் நலன் காக்க உழைப்பேன். நன்றி! வணக்கம்!

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget