R Parthiban: இந்து பிரச்சனையால் வசூலை அள்ளிய பொன்னியின் செல்வன்... பார்த்திபன் கிண்டல்!
கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம் ரூ.400 கோடியை வசூலித்துள்ள நிலையில் அதனை வரவேற்கும் விதமாக நக்கலாக ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு, பிரபு, லால், ஜெயசித்ரா,நாசர் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
View this post on Instagram
இந்த படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது. 5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை நாவலை படித்தவர்களும் சரி, படிக்காதவர்களும் சரி சிறுவர் முதல் பெரியவர்கள் வரை குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு குவிந்து வருகின்றனர். படம் மேக்கிங்கில் சூப்பராக வந்துள்ளதாகவும், அனைத்து கேரக்டர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்த நிலையில் பொன்னியின் செல்வன் வசூலிலும் ரூ.400 கோடியை கடந்துள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை லைகா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள நிலையில், அப்படத்தில் சின்ன பழுவேட்டரையாக நடித்துள்ள நடிகர் பார்த்திபன் டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், Crosses-400 Crores!!!! இந்து என்ற மதம் இன்று இந்து என்ற பிரச்சனையாக மதம்மாறி விட்டது! இந்த எழுத்தும் ஏதோ ஒரு பிரச்சனையை எழு (இ)ப்ப லாம்! எழு ப்பினால் … இன்னும் ஒரு 100! என பதிவிட்டுள்ளார்.
Crosses-400
— Radhakrishnan Parthiban (@rparthiepan) October 13, 2022
Crores!!!!
இந்து என்ற மதம்
இன்று
இந்து என்ற பிரச்சனையாக
மதம்மாறி விட்டது!
இந்த எழுத்தும் ஏதோ ஒரு
பிரச்சனையை எழு (இ)ப்ப லாம்!
எழு ப்பினால் …
இன்னும் ஒரு 100!
ஏற்கனவே ராஜராஜசோழன் விவகாரத்தில் பற்றி எரியும் கருத்து மோதல்கள் பொன்னியின் செல்வன் படத்துக்கு மிகப்பெரிய ப்ரோமோஷனாக அமைந்துள்ளது. இதனாலேயே இப்படம் இன்னும் அதிகமான வசூலைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.