மேலும் அறிய

ராஜ மாதா சிவகாமியாக நயன்தாரா... ‛பாகுபலி 3’ வெப்சீரிஸ் செப்டம்பரில் ஷூட்டிங்!

பாகுபலி 3 வெப் தொடரில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள நடிகை நயன்தாரா, வெப் தொடரிலும் (web series) தன் திறமையினை வெளிப்படுத்துவார் என்ற எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் காத்துள்ளனர்.

மக்கள் அனைவரையும் பிரம்மாண்டத்தின் உச்சிக்கு அழைத்துச் சென்ற பாகுபலி திரைப்படத்தின் மூன்றாம் பாகம், பாகுபலி 3 என்கிற பெயரில் வெப் தொடராக வெளிவரவுள்ள நிலையில் நடிகை நயன்தாரா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80 களில் தான் கதாநாயகிகள் நிலைத்து நிற்பதைப்பார்த்திருப்போம். ஆனால் இப்பொழுதெல்லாம் ஒன்று அல்லது இரண்டு படங்களில் தொடர்ச்சியாக நடித்தாலே மிகப்பெரிய ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த மனநிலை எல்லாம் ஓரம் தள்ளிவிட்டு பல ஆண்டுகளாக தன்னுடைய நடிப்பின் மூலம் நிலைத்து நிற்கிறார் லேடி சூப்பர் ஸ்டாராக அழைக்கப்படும் நயன்தாரா. இவரது அழகானத் தோற்றமும், மாறுபட்டக் கதாபாத்திரத்தில் தனக்கென்று உள்ள திறமைகளை வெளிப்படுத்துவதன் காரணம் தான் முன்னணி நடிகர்களுக்கு இணையாக சம்பளத்தினை வாங்கும் நடிகையாக உள்ளார். மேலும் ஆண்கள் மட்டுமில்லை பெண்கள் மனதினையும் கொள்ளைக்கொண்டுள்ள நடிகை என்று நயன்தாராவினைக்கூறலாம். இந்நிலையில் தான்  வெப் தொடரிலும் (web series) தன் திறமையினை வெளிப்படுத்த நயன் களம் காணவுள்ளார் என செய்திகள் வெளிவந்துக்கொண்டிருக்கிறது.

  • ராஜ மாதா சிவகாமியாக நயன்தாரா... ‛பாகுபலி 3’ வெப்சீரிஸ் செப்டம்பரில் ஷூட்டிங்!

அதிலும் எந்த படத்தில் தெரியுமா?  ஓட்டு மொத்த இந்திய சினிமாவினைத் திரும்பிப்பார்க்க வைத்த பாகுபலி படத்தில் தான். இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில், கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் வெளியான இந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றியினைக்கண்டது. இதனையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு பாகுபலி இரண்டாம் பாகமும் வெளியான நிலையில் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இல்லாத இப்படத்தில், ரம்யாகிருஷ்ணன், பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர் உள்ளிட்ட மிகப்பெரிய பட்டாளமே நடித்திருந்தது. இவர்களது தனித்துவத்துவமான நடிப்பில் மிகப்பெரிய வெற்றியினைக்கண்ட பாகுபலி 3 ஆம் பாகம் வெப் தொடராக வெளிவரவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, Bahubali before the beginning என்ற பெயரில் இத்திரைப்படம் வெப் தொடராக வெளிவரவுள்ளது. மேலும் பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமி தேவி கதாபாத்திரத்தின்  இளம் வயது வாழ்க்கையினை மையமாக வைத்து இத்தொடர் எடுக்கப்படவுள்ளது.  பாகுபலி முதல் பாகத்திற்கு முன்பு நடந்த சம்பவங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்பொழுது இப்படத்திற்கான நடிகர்கள் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும், இதற்காக அவரிடம் ஒப்புதல் கேட்க படக்குழுவினர் முயற்சித்து  வருவதாகவும் கூறப்படுகிறது.. அனைவருக்கும் பிடித்தமான படம் என்பதால் நிச்சயம் இதற்கு நயன்தாரா சம்மதிப்பார் எனக்கூறப்படுகிறது.  இதில் நடிகை ரம்யாகிருஷ்ணனின் இளது வயது கதாபாத்திரத்திலா? அல்லது பாகுபலியின் அம்மாவான அனுஷ்கா கதாபாத்திரமா? என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இருந்தப்போது பாகுபலி வெப் தொடரில் நயன்தாரா நடிக்கவுள்ளார் என்பதே ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தினைக்கொடுத்துள்ளது. இதோடு செப்டம்பர் மாதம் இந்த வெப் தொடர் எடுப்பதற்கான பணிகள் தொடங்கவிருப்பதாவும், அடுத்த ஆண்டு  ஒடிடியில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

  • ராஜ மாதா சிவகாமியாக நயன்தாரா... ‛பாகுபலி 3’ வெப்சீரிஸ் செப்டம்பரில் ஷூட்டிங்!

கொரோனாவினால் திரையரங்குகளிலும் திறக்கப்படாத காரணத்தினால் ஓஓடி தளங்களில் படங்கள் வெளிவரத்தொடங்கிவிட்டன. இந்நிலையில் தான் ஒடிடி தளங்களான அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஜி5, டிஸ்னி ஹாட்ஸ்டார் போன்றவற்றிற்கு வெப்சீரிஸ் தான் நல்ல வியாபாரம். ஏற்கனவே காஜல் அகர்வால் லைவ் டெலிகாஸ்ட், தமன்னாவின் நவம்பர் ஸ்டோரி மற்றும் சமந்தாவின் தி ஃபேமிலி மேன் 2 சர்ச்சையினை ஏற்படுத்தினாலும் வசூலில் சாதனைப்பெற்றது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ தலைநகரில் யார், யாருக்கு எம்.எல்.ஏ சீட் ?
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ தலைநகரில் யார், யாருக்கு எம்.எல்.ஏ சீட் ?
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ தலைநகரில் யார், யாருக்கு எம்.எல்.ஏ சீட் ?
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ தலைநகரில் யார், யாருக்கு எம்.எல்.ஏ சீட் ?
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Sabareesan: லண்டனில் அம்பேத்கர்–கலைஞர் ஆய்வுப் படிப்பு.! தமிழக மாணவர்களுக்கு அசத்தல் சான்ஸை ஏற்படுத்திய சபரீசன்
தமிழக மாணவர்களுக்கு வாரி வழங்கிய சபரீசன்.! லண்டனில் 3 மாதம் தங்கி படிக்க ஜாக்பாட்- அசத்தல் அறிவிப்பு
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Embed widget