Kavin : பிளடி பெக்கர் படத்திற்காக உண்மையாகவே பிச்சை எடுத்தேன்.. நடிகர் கவின் பகிர்ந்த தகவல்
இயக்குநர் நெல்சன் திலிப் குமார் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பிளடி பெக்கர் படத்திற்காக தான் உண்மையாக பிச்சை எடுத்ததாக நடிகர் கவின் தெரிவித்துள்ளார்
கவின்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அறிமுகமாகி வளர்ந்து வரும் நடிகர் கவின். தொலைக்காட்சியில் இருந்து சினிமாவிற்கு வருபவர்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியான ரூட்டை பின்பற்றி வருவது வழக்கம். அந்த வகையில் கவின் சற்று வித்தியாசமான அனுகுமுறையை கையாள்கிறார். புதிய கதைக்களங்கள், இன்றை தலைமுறைக்கு ஏற்ற மாதிரியான கதைகள், நடிப்பிற்கு தீனிப்போடு விதமான கதை என அவர் நடிக்கும் படங்களில் இந்த தனித்துவங்களை கவனிக்க முடிகிறது . டாடா , ஸ்டார் ஆகிய படங்கள் பெரியளவில் வெற்றிபெற்றுள்ள நிலையில் தற்போது அவர் நெல்சன் திலிப்குமார் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
பிளடி பெக்கர்
இயக்குநர் நெல்சன் திலிப்குமாரின் உதவி இயக்குநரான சிவபாலன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் பிளடி பெக்கர். இப்படத்தில் கவின் பிச்சைக்காரன் கெட் அப்பில் நடித்துள்ளார். நெல்சனின் படங்களைப் போலவே இப்படமும் டார்க் காமெடி ஜானரில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபடத்தில் இப்படத்தின் சிறிய முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. வரும் அக்டோபர் 31 ஆம் தேதி சிவகார்த்திகேயனின் அமரன் படத்துடன் இப்படமும் வெளியாகிறது.
Bloody Beggar - Beggar Peek | Nelson Dilipkumar | Kavin | Sivabalan Mut... https://t.co/j2KUezfNfP
— One and Only Show Cancel Star ⭐👴 (@DVF4Life) October 8, 2024
Naala irukke 😅
நிஜமாக பிச்சை எடுத்த கவின்
பிளடி பெக்கர் படத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொண்ட விதம் பற்றி நடிகர் கவின் சமீபத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். “ உண்மையாகவே பிச்சைக்காரர்களுக்கு காசு போடுகிறார்களா என்கிற சந்தேகம் எனக்கு வந்தது. அதனால் கெட் அப் போட்டுக்கொண்டு தெருவில் நடந்தேன். ஒரு அம்மாவிடம் சென்று சாப்பிட்டு ரெண்டு நாள் ஆச்சு காசு இருந்தா கொடுங்க என்று கேட்டேன். அந்த அம்மா எனக்கு இருபது ரூபாய் கொடுத்தார். அதற்கு பின் எனக்கு நம்பிக்கை வந்து சரி ஷூட் போகலாம் என முடிவு செய்தேன்” என கவின் தெரிவித்த்ள்ளார்.
மேலும் படிக்க : Alia Bhatt : அலியா பட்டுக்கு என்ன ஆச்சு? இந்த பாதிப்பா? ADHD என்றால் என்ன?