மேலும் அறிய

திருமணம் வரை சென்று ஏமாற்றிய நடிகர்: தற்கொலைக்கு முயன்ற நடிகை ஸ்ரீபிரியா.. பிரபலம் கூறிய ஷாக் தகவல்!

நடிகர் ஒருவர் ஸ்ரீபிரியாவை காதலித்து ஏமாற்றியதால் அவர் தற்கொலை செய்ய முயற்சித்ததாக பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் ஓபனாக கூறியுள்ளார்.

சென்னையில் பிறந்து வளர்ந்தவர் நடிகை ஸ்ரீபிரியா. இயக்குநர் பி மாதவன் இயக்கத்தில் உருவான 'முருகன் காட்டிய வழி' என்ற படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு 'அவள் ஒரு தொடர் கதை', 'உன்னைதான் தம்பி', 'பணத்துக்காக', 'பட்டிக்காட்டு ராஜா' என்று வரிசையாக ஏராளமான படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

கிட்டத்தட்ட 350க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இதில் 200 படங்களில் தமிழ் மொழியில் நடித்துள்ளார். ரஜினிகாந்த், கமல் ஹாசன், சிவாஜி கணேசன், ஜெய் சங்கர் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். அவள் அப்படித்தான், ஆட்டுக்கார அலமேலு, அன்னை ஒரு ஆலயம், ஆடு புலி ஆட்டம், இளமை ஊஞ்சலாடுகிறது, அலாவுதீன் அற்புத விளக்கு, நட்சத்திரம் ஆகிய படங்கள் இவரது நடிப்பில் வந்த ஹிட் அடித்த படங்களாகும்.


திருமணம் வரை சென்று ஏமாற்றிய நடிகர்: தற்கொலைக்கு முயன்ற நடிகை ஸ்ரீபிரியா.. பிரபலம் கூறிய ஷாக் தகவல்!

சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகை லதாவின் சகோதரர் ராஜ்குமார் சேதுபதியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் தான் ஸ்ரீபிரியா பற்றி பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். நடிகை ஸ்ரீபிரியாவின் உண்மையான பெயர் அலமேலு. இவர் இசைக்குடும்பத்தைச் சேர்ந்தவர். பிக் பாஸ் புகழ் நடிகர் சிவக்குமாரின் அம்மாவும், ஸ்ரீபிரியாவின் அக்காவுமான மீனாட்சி நடிப்பதற்கு போட்டோ எடுக்கிறார். அவர் மட்டுமின்றி அவருடன் நடிகை ஸ்ரீபிரியாவும் போட்டோ எடுக்கிறார். அப்படி எடுக்கப்பட்ட போட்டோவை தயாரிப்பாளர்கள் பார்த்து ஸ்ரீபிரியாவிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுக்கிறார்கள்.

அப்படி அவர் நடித்த படங்களில் ஒன்று தான் மாணிக்க தட்டில். இந்தப் படத்தில் 5 நடிகைகளில் ஒருவராக நடித்தார். அதன் பிறகு தான் நடிகர் சிவக்குமார் நடித்த ஆட்டுக்கார அலமேலு படத்தில் நடித்தார். இந்தப் படம் கொடுத்த வரவேற்புக்கு பிறகு அடுத்தடுத்து பட வாய்ப்பு குவிந்தது. ஆட்டுக்கார அலமேலு படம் கொடுத்த வரவேற்புக்கு பிறகு சிவக்குமார் மற்றும் ஸ்ரீபிரியா இருவரும் இணைந்து 12 படங்களில் நடித்தார்கள். ஒரு கட்டத்தில் நடிகர் கார்த்திக் உடன் இணைந்து நினைவுகள் படத்தில் நடித்தார். அந்தப் படத்தின் மூலமாக இருவருக்கும் இடையில் காதல் வர இருவரும் திருமணம் செய்து கொள்ளும் முடிவுக்கு வருகிறார்கள். ஸ்ரீபிரியா நடிகர் கார்த்திக்கை விட 4 வயது மூத்தவர். திருமணம் செய்து கொள்ளும் நிலைக்கு வந்த பிறகு திடீரென்று கார்த்திக் நடிகை ராகினியை மணந்து கொண்டார். 


திருமணம் வரை சென்று ஏமாற்றிய நடிகர்: தற்கொலைக்கு முயன்ற நடிகை ஸ்ரீபிரியா.. பிரபலம் கூறிய ஷாக் தகவல்!

இது குறித்து கேள்விப்பட்ட ஸ்ரீபிரியா கார்த்திக் நடித்துக் கொண்டிருந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிங்கிற்கு கோபத்துடன் வந்து அவரை சரமாரியாக அடித்தாராம். அதோடு நிற்காமல் அங்கிருந்த பொருட்களை எல்லாம் தூக்கிப்போட்டு உடைத்தார். மேலும், உருகி உருகி காதலித்த நிலையில் மன வேதனை அடைந்த ஸ்ரீபிரியா தற்கொலைக்கு முயற்சி செய்தாராம். அப்போது தான் அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். மருத்துவர்கள் அவரை எப்படியோ காப்பாற்றி விட்டனர்.  அதிலிருந்து மீண்டு வந்த ஸ்ரீபிரியா மலையாள நடிகர் ராஜ்குமார் சேதுபதியை திருமணம் செய்து கொண்டார். ரொம்பவே தைரியமான நடிகை என திரையுலகில் பெயர் எடுத்தவர் ஸ்ரீப்ரியா.

 

தலைப்பு செய்திகள்

அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!
”போலி ஆபாச வீடியோ...பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்
”போலி ஆபாச வீடியோ”...”பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
New Car Launches in Oct.: டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்
டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்
Plague Scare In Russia: பிளேக் பீதியில் ரஷ்யா.! புதிய தொற்றால் பலியான ஆய்வக ஆராய்ச்சியாளர்; தனிமைக்குள்ளான நூற்றுக்கணக்கானோர்
பிளேக் பீதியில் ரஷ்யா.! புதிய தொற்றால் பலியான ஆய்வக ஆராய்ச்சியாளர்; தனிமைக்குள்ளான நூற்றுக்கணக்கானோர்
Embed widget