ஸ்டுடியோ கிரீன் கொடுத்த சிக்னல்.. கார்த்தி செம ஹேப்பி.. வா வாத்தியார் ரிலீஸ் எப்போது தெரியுமா?
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள வா வாத்தியார் படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியானது.

பருத்திவீரன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனவர் கார்த்தி. கமர்ஷியல் படங்களை தாண்டி ரசிகர்கள் விரும்பும் பீல் குட் படங்களிலும் நடித்து கவனத்தை ஈர்த்து வருகிறார். ஒவ்வொரு படத்திற்கு வித்தியாசம் காட்டி நடிக்கும் கார்த்தி நல்ல கதைகளை தேர்ந்தெடுத்தும் நடிக்கிறார். கடந்தாண்டு இவரது நடிப்பில் வெளியான மெய்யழகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை கோலிவுட் முதல் பாலிவுட் திரை பிரபலங்கள் வரை பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர். இப்படத்தை தொடர்ந்து கைதி 2 படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
அதிக நாள் படப்பிடிப்பு
ஆனால், டாணாக்காரன் இயக்குநர் தமிழ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதனிடையே கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள வா வாத்தியார் படம் குறித்த முக்கிய அப்டேட்டை படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள வா வாத்தியார் படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ள இப்படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண், ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள நிலையில் இதற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
வா வாத்தியார் ரிலீஸ்
இப்படம் குறித்த அறிவிப்பு வெளியான போதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், கார்த்தியின் சினிமா கரியரிலேயே அதிக படப்பிடிப்பு நடத்தப்பட்ட படம் என்றால் வா வாத்தியார் தான். படப்பிடிப்பு 2024 ஆம் ஆண்டிலேயே முடிவடைந்ததாக செய்திகள் வந்தாலும், படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் எதிர்கொண்ட சிக்கல்கள் காரணமாக பட வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டது. படம் பார்த்ததில் இயக்குநருக்கு திருப்தி இல்லாததால் மீண்டும் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், வா வாத்தியார் படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.




















