17 வயதில் முத்த காட்சி..விருப்பமே இல்ல...வாய்திறந்து பேசிய க்ரித்தி ஷெட்டி..சர்ச்சையில் நானி
Krithti Shetty : ஷியாம் சிங்கா ராய் படத்தில் நடிகர் நானியுடன் முத்த காட்சியில் நடித்தது குறித்து நடிகை க்ரித்தி ஷெட்டி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நடிகை க்ரித்தி ஷெட்டி மற்றும் நடிகர் நானி நடித்த முத்த காட்சி தற்போது ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது. ஷியாம் சிங்கா ராய் படத்தில் முத்த காட்சியில் நடித்தது குறித்து க்ரித்தி ஷெட்டி நேர்காணல் ஒன்றில் பேசியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.
17 வயதில் முத்த காட்சி குறித்து க்ரித்தி ஷெட்டி
நானி , க்ரித்தி ஷெட்டி, சாய் பல்லவி ஆகியோர் நடித்து கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான படம் ஷியாம் சிங்கா ராய். இப்படத்தில் நானி மற்றும் க்ரித்தி ஷெட்டி முத்த காட்சியில் நடித்திருந்தனர். பேட்டி ஒன்றில் இந்த காட்சியில் நடித்தது குறித்து க்ரித்தி ஷெட்டி பேசியுள்ளார். அதில் " அந்த காட்சியில் நடித்தது ரொம்ப அசெளகரியமாக இருந்தது. நடித்து முடித்த பின் தான் இந்த மாதிரியான காட்சிகளில் நான் நடிக்க விரும்பவில்லை என்பதை உணர்ந்தேன். விருப்பமில்லை என்றால் இனிமேல் முத்த காட்சிகளிலோ அல்லது புகைப்பிடிக்கும் காட்சிகளிலோ நடிக்க வேண்டாம் என முடிவு செய்திருக்கிறேன் " என அவர் கூறியுள்ளார்.
நானியை விமர்சிக்கும் ரசிகர்கள்
க்ரித்தி ஷெட்டி இந்த காட்சியில் நடித்தபோது அவரது வயது வெறும் 17 தான். அதே நேரத்தில் நானியின் வயது 37. ஒரு மைனர் பெண்ணோடு நானி எப்படி முத்த காட்சியில் நடிக்க சம்மதித்தார் என சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
She clearly mentioned that she felt very uncomfortable while doing the intimate scene with Nani. And just look at her age she’s only 17. Knowing the theme of SSR, how could you go ahead with such a scene involving a girl who a minor? @NameisNani https://t.co/kKfVLHvrgD pic.twitter.com/0mDXPb9vp0
— VB (@Mr_ViolentBoy) August 30, 2025
யார் இந்த க்ரித்தி ஷெட்டி
வளர்ந்து வரும் நடிகையான க்ரித்தி ஷெட்டி தெலுங்கில் 2021 ஆம் ஆண்டு வெளியான உப்பேனா படத்தில் அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தார். 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் தேதி பிறந்தார். தமிழில் கார்த்தி நடித்துள்ள வா வாத்தியார் , ரவி மோகன் நடித்துள்ள ஜீனி , பிரதிப் ரங்கநாதன் நடித்துள்ள ஜீனி ஆகிய மூன்று படங்களில் நடித்துள்ளார்கள். லவ் இன்சூரன்ஸ் கம்பேனி இந்த தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.






















