Kalidas Jayaram: “கைகூடிய காதல்”.. வெகு விமரிசையாக நடைபெற்ற காளிதாஸ் ஜெயராம் நிச்சயதார்த்தம்..!
பிரபல நடிகர் ஜெயராமின் மகனான காளிதாஸ் ஜெயராம், மாடல் அழகியான தாரிணி காளிங்கராயரை காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

சமீபத்தில் மாடலிங் போட்டி ஒன்றில் முதல் பரிசை தாரிணி வென்றதைத் தொடர்ந்து அவருடன் மேடையில் காளிதாஸ் ஜெயராம் கலந்துகொண்டார். அப்போது தாரிணி குறித்து பேசும்படி நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்டுக் கொண்டபோது “ தாரிணி தான் நான் திருமணம் செய்துகொள்ளப் போகும் பெண்” என்று காளிதாஸ் கூறினார்.
தொடர்ந்து வாரணம் ஆயிரம் சூர்யா ஸ்டைலில் அவருக்கு ப்ரபோஸ் செய்துள்ளார். இந்த நிகழ்வு காண்போரைக் கவர்ந்து வருகிறது. இந்நிலையில், விரைவில் காளிதாஸ் ஜெயராம் தன்னுடைய திருமண செய்தியை பகிர்ந்துகொள்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
View this post on Instagram
மேலும் படிக்க: Japan Movie Review: கார்த்திக்கு கை கொடுத்ததா தீபாவளி ரேஸ்? ’ஜப்பான்’ போலாமா வேணாமா? முழு விமர்சனம் இதோ!





















