மீண்டும் சர்ச்சையை கிளப்பிய அஷ்வின்.. போஸ்ட்டைப் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..
’கர்மா உங்களை துன்புறுத்தட்டும்....’ : அஸ்வின் யாரை குறிப்பிட்டு சொல்கிறார் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
“என்ன சொல்ல போகிறாய்” படத்தின் ஆடியோ நிகழ்ச்சியில் பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட நடிகர் அஸ்வின், தற்போது புதிய பதிவால் சர்ச்சையில் சிக்கிக்கொண்டுள்ளார்.
அஸ்வின் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில், 'பழிவாங்கவா? இல்லை நான் மிகவும் சோம்பேறி. நான் இங்கே உட்கார்ந்து கொள்கிறேன். கர்மா உங்களைத் துன்புறுத்தட்டும்' என வைத்துள்ளார். அஸ்வினின் இந்தப் பதிவு தற்போது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்மா உங்களை துன்புறுத்தட்டும் என்றும் அஸ்வின் யாரை குறிப்பிட்டு சொல்கிறார் என்றும், முதலில் தூங்கிவிடுவேன் என்று கூறிய அஸ்வின், கர்மா குர்மா என்கிறாரே என்றும் நெட்டிசன்கள் பாய்ண்ட் பாய்ண்ட்டாக அவரை நோக்கி கேட்கின்றனர்.
Trident Arts நிறுவன தயாரிப்பாளர் R.ரவீந்திரன் தயாரிப்பில், குக் வித் கோமாளி புகழ் அஷ்வின் குமார் லக்ஷ்மிகாந்தன் நாயகனாக நடிக்கும் திரைப்படம் “என்ன சொல்ல போகிறாய்”. A.ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் அஸ்வின் படத்தின் கதை பிடிக்காவிட்டால், தான் தூங்கிவிடுவேன் என்றும் இதுவரையில் 40 கதைகளை கேட்டு தூங்கியிருக்கிறேன். ஆனால் நான் கதை கேட்டு தூங்காத ஒரே இயக்குநர் ஹரிதான் என இயக்குநரை புகழ்ந்து பேசினார்.
அவரது இந்தப் பேச்சு சமூகவலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை பெற்றது. பலரும் அவர் பேசிய வீடியோ எடிட் செய்து ட்ரோல் செய்தனர். இது தொடர்பாக விளக்கம் அளித்த நடிகர் அஸ்வின் “நான் பேசியது யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள். என்னுடைய முதல் படம் என்பதால் அங்கு நான் மிகவும் சந்தோஷமாக இருந்தேன். அதனால் அங்கு நின்று என்ன பேசுவது என்று தெரியவில்லை” என்று பேசினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்