மேலும் அறிய

'’ஏன் இந்த பாரபட்சம்? ஆசிரியர் தகுதித் தேர்வில் MBC-க்கு அநீதி’’- எழும் கண்டனம்!

ஆசிரியர்களுக்கான சிறப்புத் தகுதித் தேர்வில் எம்பிசிகளுக்கான உரிமை மறுப்பா? பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்!

ஆசிரியர்களுக்கான சிறப்புத் தகுதித் தேர்வில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான உரிமை மறுக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’ஆசிரியர் பணியாற்றுவதற்கு தகுதித் தேர்வினை கட்டாயமாக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்காக தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் வரும் ஜூலை 4, 5 தேதிகளில் சிறப்புத் தகுதித் தேர்வு நடத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு கடந்த 14-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

அதேவேளை, இதில் உள்ள தேர்ச்சி மதிப்பெண் நடைமுறை பல ஆண்டுகளாகத் தங்களை அர்ப்பணித்துப் பணியாற்றி வரும் ஆசிரியர்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்துவதாக உள்ளது.

2003, 2004 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட அரசாணைகள் மூலம் சத்துணவு அமைப்பாளர்கள் ஆசிரியர்களாகப் பணி ஈர்ப்பு செய்யப்பட்டபோது அனைவரும் 'பணியில் உள்ள ஒரே வகுப்பினர்' எனக் கருதப்பட்டனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட சிறப்புத் தேர்வுகளில், பொதுவான ஒரே குறைந்தபட்ச மதிப்பெண் மட்டுமே தேர்ச்சியாக நிர்ணயிக்கப்பட்டது.

சிறப்பு மதிப்பெண் சலுகை இல்லையா?

ஆனால் தற்போது ஆசிரியர்களுக்கான சிறப்புத் தகுதித் தேர்வில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 40 விழுக்காடு (150 க்கு 60) மதிப்பெண்களும், இதர பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 50 விழுக்காடு (150 க்கு 75) மதிப்பெண்களும் சிறப்புத் தளர்வாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை மாநிலத்தில் உள்ள எம்.பி.சி எனப்படும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு சிறப்பு மதிப்பெண் சலுகை அறிவிக்கப்படவில்லை. தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு உள்ள நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் பணிநிலைப்பு தொடர்வதில் இப்பிரிவினர் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.

இதனை  நினைக்கும் பொழுது வேதனையாக உள்ளது. 'சமூக நீதியின் தொட்டில்' என வாய்க்கு வாய் பேசும் திராவிட மாடல் அரசு ஏற்கனவே உள்ள ஒரு குறிப்பிட்ட இட ஒதுக்கீட்டு பிரிவினரை ஏன் புறக்கணிக்கிறது? இன்னொரு புறம் 'சமத்துவம்' பேசும் இந்த அரசு ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான தேர்வில்  'சமத்துவத் தகுதி' முறையைத் பின்பற்றாமல் பாகுபாடு ஏற்படுத்துவது ஏன்?

இவ்வளவு வித்தியாசம் தேவையில்லை

மேலும் ஒரு பிரிவிற்கும் மற்றொரு பிரிவினருக்கும் 15 மதிப்பெண்கள் வித்தியாசம் உள்ளது. ஓரிரு மதிப்பெண் வேறுபாட்டிலேயே ஆயிரக் கணக்கில் இருப்பார்கள். இது நியமனத் தேர்வு அல்ல, தகுதித் தேர்வுதான். இதற்கு இவ்வளவு வித்தியாசம் தேவையில்லை.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒரே நிலையில் உள்ள பணியாளர்களை தகுதிச் சோதனையின் போது மீண்டும் உட்பிரிவுகளாகப் பிரிப்பது சட்ட ரீதியான முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும். ஒரே பள்ளியில், ஒரே பாடத்தைப் போதிக்கும் இரு ஆசிரியர்களில், ஒருவருக்கு ஒரு தேர்ச்சி மதிப்பெண் தகுதியாகவும், மற்றொருவருக்கு வேறு மதிப்பெண் தகுதியாகவும் நிர்ணயிப்பது தேவையற்ற முரண்பாடுகளையே ஏற்படுத்தும்.

நிர்வாகச் சமச்சீர்

தமிழக அரசின் பிற துறைகளில் பணியில் உள்ளோருக்காக நடத்தப்படும் தகுதித் தேர்வுகளில், சமூகப் பிரிவினைக் கடந்து அனைவருக்கும் ஒரே மாதிரியான 45% மதிப்பெண் முறையே பல தசாப்தங்களாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆகவே ஆசிரியர்களுக்கான சிறப்புத் தகுதித் தேர்வும் ஒரு துறை சார்ந்த தகுதித் தேர்வு என்பதால், இதிலும் ஒரே மதிப்பெண் முறையைப் பின்பற்றுவதே நிர்வாகச் சமச்சீரை உருவாக்கும்.

உச்ச நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் தகுதித் தேர்வு என்பது ஒரு 'வடிகட்டி' மட்டுமே என்றும், அதில் தளர்வுகள் வழங்குவது மாநில அரசின் கொள்கை முடிவு  என்றும் குறிப்பிட்டுள்ளது. எனவே, பணியில் உள்ள ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, குறைந்தபட்ச தகுதியான 40% (60 மதிப்பெண்கள்) என்பதை அனைவருக்கும் பொதுவாக்க வேண்டும்.

எனவே, பணியில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் 40 விழுக்காடு மதிப்பெண்களை பொதுவானதாக நிர்ணயிக்க வேண்டும் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு சலுகை மதிப்பெண் குறைத்து தனியாக அறிவிக்க வேண்டும்'’ என்று ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

5 வருடம் சொன்னீங்க... நாங்க 16 வருஷமா இருக்கோம்! - முதல்வர் விஜய்க்கு பகுதிநேர ஆசிரியர்கள் வைத்த உருக்கமான வேண்டுகோள்.
5 வருடம் சொன்னீங்க... நாங்க 16 வருஷமா இருக்கோம்! - முதல்வர் விஜய்க்கு பகுதிநேர ஆசிரியர்கள் வைத்த உருக்கமான வேண்டுகோள்.
மதுரை பட்டதாரி ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதி தேர்வு: பலத்த சோதனைக்கு பின் நடைபெற்றது !
மதுரை பட்டதாரி ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதி தேர்வு: பலத்த சோதனைக்கு பின் நடைபெற்றது !
நாளை 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?  அசல் மார்க்‌ஷீட் எப்போ?
நாளை 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?  அசல் மார்க்‌ஷீட் எப்போ?
அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர அறிய வாய்ப்பு! செங்கல்பட்டு மாணவர்களுக்கு ஹாப்பியான நியூஸ்!
அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர அறிய வாய்ப்பு! செங்கல்பட்டு மாணவர்களுக்கு ஹாப்பியான நியூஸ்!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாளை 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?  அசல் மார்க்‌ஷீட் எப்போ?
நாளை 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?  அசல் மார்க்‌ஷீட் எப்போ?
Mekedatu Dam: 70களில் ஏமாந்ததைப்போல மீண்டும் ஏமாந்து விடக் கூடாது; மேகதாது விவகாரத்தில் அன்புமணி எச்சரிக்கை!
Mekedatu Dam: 70களில் ஏமாந்ததைப்போல மீண்டும் ஏமாந்து விடக் கூடாது; மேகதாது விவகாரத்தில் அன்புமணி எச்சரிக்கை!
மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன்.. தீ வைத்து கொளுத்திய மைத்துனர் - வீடியோ வைரல்
மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன்.. தீ வைத்து கொளுத்திய மைத்துனர் - வீடியோ வைரல்
Hyundai Cheapest EV: செம்ம ஆஃபர்... ஹூண்டாய் க்ரெட்டா இவி அறிமுகம்- ஒரே சார்ஜில் 500 கிமீ- ரூ.11 லட்சத்துக்கும் கீழே!
Hyundai Cheapest EV: செம்ம ஆஃபர்... ஹூண்டாய் க்ரெட்டா இவி அறிமுகம்- ஒரே சார்ஜில் 500 கிமீ- ரூ.11 லட்சத்துக்கும் கீழே!
Grand Vitara Hybrid: மாருதியின் 21KM மைலேஜ் தரும் ஹைப்ரிட் கார்..! ரூ.3 லட்சம் தள்ளுபடி, ரூ.6,800 போதுமே, EMI விவரங்கள்
மாருதியின் 21KM மைலேஜ் தரும் ஹைப்ரிட் கார்..! ரூ.3 லட்சம் தள்ளுபடி, ரூ.6,800 போதுமே, EMI விவரங்கள்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
தொடர் தோல்வியில் இந்தியா! வெற்றிப்பாதைக்கு திரும்புவது எப்போது? கம்பீருக்கு முற்றும் நெருக்கடி
தொடர் தோல்வியில் இந்தியா! வெற்றிப்பாதைக்கு திரும்புவது எப்போது? கம்பீருக்கு முற்றும் நெருக்கடி
659 கி.மீட்டர் மைலேஜ்.. 52 ஆயிரம் ஆஃபர்! 4 லட்சம் ரூபாய்க்கும் கம்மி விலையில் Maruti Alto K10
659 கி.மீட்டர் மைலேஜ்.. 52 ஆயிரம் ஆஃபர்! 4 லட்சம் ரூபாய்க்கும் கம்மி விலையில் Maruti Alto K10
Embed widget