குறைந்த குடிநீர் கிளாஸ்... நிறைகுடமாக அமர்ந்திருக்கும் அஜித்... லேட்டஸ்ட் ஸ்டில் லீக்!
அஜீத் குமாரின் புகைப்படங்கள் அவரின் ரசிகர்களால் எப்போதும் வரவேற்கப்படும். இந்நிலையில் சமீபத்திய அவரது புகைப்படம் மீண்டும் வைரலாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் அஜித் கடைசியாக ஹெச். வினோத் இயக்கிய வலிமை படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி இருந்தது. அவர் 3வது முறையாக தயாரிப்பாளர் போனி கபூர் - இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
View this post on Instagram
வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. 70 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் அஜித் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்ற புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகின. இதனை தொடர்ந்து சென்னை திரும்பிய அவர் AK 61 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்ற தகவல் வெளியானது. இந்த படத்தில் மஞ்சு வாரியர், வீரா, ஜான் கொக்கன், அஜய் உள்ளிட்ட பலரும் நடித்து வரும் நிலையில் ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த படத்திற்காக அஜித் தனது உடல் எடையை குறைத்து செம ஸ்மார்ட்டாக மாறினார்.
Latest Pic Of Mr.#Ajithkumar 😍#AK61 pic.twitter.com/OBchWzAWW8
— UK Ajith Team (@AjithTeam_UK) August 26, 2022
சமீபத்தில் நடிகர் அஜித் உயரமான கட்டிடம் ஒன்றின் மீதிருந்து ரசிகர்களுக்கு கையசைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியது. அதேபோல் தற்போது அவரது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் நடிகர் அஜித் வெள்ளை சட்டை மற்றும் கூலிங் க்ளாஸ் அணிந்திருந்தார்.
Our chief look 🥳🥳
— soundar saha ᵛᵃˡᶤᵐᵃᶤ Stay Home Stay Safe (@SahaSoundar) August 26, 2022
Ajith sir 🖤🦁
| Pic: @ajithFC | @arianoarun | #AjithKumar | #Ak61 | pic.twitter.com/kfVzPcFmg9
கடைசி கட்டமான படப்பிடிப்பு வெளிநாட்டில் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ஆகையால் AK61 தீபாவளிக்கு ரிலீஸ் ஆவது சந்தேகம்தான் மற்றும் AK62 இயக்குனர் விக்னேஷ் சிவன் திரைப்பட படப்பிடிப்பை இந்த ஆண்டு கடைசியில் துவங்கும் என அறிவித்திருக்கிறார். அஜித்தின் திரைப்படங்கள் அடுத்த ஆண்டிலிருந்து ஒன்றன்பின் ஒன்றாக வெளியாக உள்ளது அஜித் ரசிகர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய டிரீட்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அஜித் ரெஸ்டாரெண்ட் ஒன்றில், வெள்ளை ஆடையில் அமர்ந்திருக்கும் போட்டோ வெளியாகியுள்ளது. அவர் குடித்து வைத்த குடிநீர் கிளாஸ் அருகில் சிரித்தபடி அமர்ந்திருக்கும் அஜித்தை பார்க்க அம்சமாக இருக்கிறார். வெளியான சிறிது நேரத்தில் அந்த போட்டோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது.