Arjun Mother Passed Away :நடிகர் அர்ஜூனின் தாயார் மறைவு.. திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல்..
பிரபல நடிகர் ஆக்ஷன்கிங் அர்ஜூனின் தாயார் உடல்நலக்குறைவால் இன்று பெங்களூரில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் அர்ஜூன். கர்நாடகாவைப் பூர்வீகமாக கொண்ட இவரது தாயார் லட்சுமி தேவம்மா. அவருக்கு வயது 88. கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த லட்சுமி தேவம்மா இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.
அர்ஜூனின் தாயார் லட்சுமி தேவம்மா, கர்நாடகா மாநிலத்தின் மைசூரில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிவர். ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு லட்சுமி தேவம்மா பெங்களூரிலே வசித்து வந்துள்ளார். இந்த சூழலில்தான் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க : Vikram movie 50th day celebration : ஓடிடியில் வந்தால் என்ன இப்ப! இன்னும் தியேட்டர்களில் நாயகன்தான்! 50 நாளை கடந்தும் வசூலில் விக்ரம்!
மேலும் படிக்க : Vaadivasal glimpse: சூர்யாவின் அடுத்த அவதாரம்..பிறந்தநாள் பரிசாக வெளியானது வாடிவாசல் கிளிம்ப்ஸ்..!
லட்சுமி தேவம்மா – சக்தி பிரசாத் தம்பதியினருக்கு கிஷோர் சார்ஜா, அர்ஜூன் சார்ஜா என்ற இரு மகன்கள் உள்ளனர். அர்ஜூன் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று தென்னிந்திய மொழிப் படங்களில் மிகவும் பரப்பபான நடிகராக வலம் வருகிறார். அவரது சகோதரர் கிஷோர் கன்னட திரையுலகில் முக்கிய இயக்குனராக உள்ளார்.
கன்னட திரையுலகின் பிரபல நடிகரான சிரஞ்சீவி சார்ஜா, துருவா சார்ஜா அர்ஜூனின் உறவினர்கள் ஆவார்கள். இவர்களில் நடிகர் சிரஞ்சீவி சார்ஜா கடந்த 2020ம் ஆண்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக்ஷன்கிங் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் அர்ஜூன் தாயார் மறைந்ததை அடுத்து, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவருக்கு ஆழ்ந்த இரங்கலை கூறி வருகின்றனர். அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யாவும் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. ஏழுமலை, முதல்வன், ஜென்டில்மேன், ஜெய்ஹிந்த், மருதமலை உள்ளிட்ட ஏராளமான மெகாஹிட் படங்களை தமிழில் நடித்தவர் அர்ஜூன் ஆவார்.
மேலும் படிக்க : Rajinikanth speech: சாதி அறிவை தீர்மானிக்கிறதா..? ரஜினி பேச்சால் வெடித்த சர்ச்சை.. கொந்தளித்த சீமான்..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்