தனிப்பட்ட வாழ்க்கை மோசம்... மாஸ்டர் தந்த ஆறுதல்.. இன்ஸ்டாவுக்கு டாடா.. மாளவிகா மோகனனின் கதை
2021 ஆம் ஆண்டு என் வாழ்வில் பல நிச்சயமற்ற விஷயங்கள் நிறைந்து இருக்கிறது. அந்த சமயங்களில் எனது அற்புதமான குடும்பத்தைத் தவிர, எனக்கு உதவியது அருமையான நண்பர்கள் தான் என மாஸ்டர் பட கதாநாயகி மாளவிக்க மோகனன், தனது நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் இஸ்டாகிராம்மில் தெரிவித்துள்ளார்.
![தனிப்பட்ட வாழ்க்கை மோசம்... மாஸ்டர் தந்த ஆறுதல்.. இன்ஸ்டாவுக்கு டாடா.. மாளவிகா மோகனனின் கதை 2021 has started with master, personal life low malavika mohanan revealed in Instagram post தனிப்பட்ட வாழ்க்கை மோசம்... மாஸ்டர் தந்த ஆறுதல்.. இன்ஸ்டாவுக்கு டாடா.. மாளவிகா மோகனனின் கதை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/04/79845513f2c2e5ce6d8a5484bfd75ef7_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
“கடந்த 2021 ஆம் ஆண்டு ஒரு கடினமான ஆண்டு. நாம் எப்போதும் நம் வாழ்வின் நடக்கும் நல்ல காரியங்களை மட்டுமே உலகிற்கு காட்டுகிறோம். ஏனென்றால் யாரும் கடினமான காரியங்களை வெளிப்படுத்த விரும்புவதில்லை. நாம் கடந்து வந்த சோகம் என்றுமே மனவேதனைகளை தருகிறது. ஆனால் இந்த ஆண்டு நான் மற்ற ஆண்டுகளை விட மிகவும் கடினமாக இருந்தேன். தொழில் சார்ந்த விஷயங்கள் சிறப்பாக இருந்தன. இந்த ஆண்டின் எனது முதல் திரைப்பட வெளியீடு மாஸ்டர் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பின் எனக்குப் பிடித்த நடிகர் ஒருவருடன் வேறொரு படத்தில் பணியாற்றினேன், அவரிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். எனது முதல் பாலிவுட்டில் படம் பிப்ரவரியில் தொடங்க உள்ளது. மேலும் அதில் பல அற்புதமான விஷயங்களும் நிறைந்ததுள்ளது. ஆனால் தனிப்பட்ட முறையில் நான் ஒரு சோர்வான நிலையில் இருந்தேன். நான் சில மாதங்கள் மிகவும் கடினமான பகுதியில் இருந்தேன். அது தான் எனது முழு வாழ்க்கையிலும் நான் அனுபவித்த கஷ்டமான பகுதி.
View this post on Instagram
என் வாழ்வில் பல நிச்சயமற்ற காரியங்கள் நிறைந்திருக்கிறது. அந்த சமயங்களில் எனது அற்புதமான குடும்பத்தைத் தவிர , எனக்கு உதவிய ஒரே விஷயம் எனக்கு இருக்கும் அற்புதமான நண்பர்கள்.
நட்பை நாமெல்லாம் எத்தனையோ தடவை தவிர்த்து வந்துள்ளோம். மிகவும் பிஸியாக வேலை செய்த பிறகு குடும்பத்துடன் ஓய்வு நேரம் செலவழிக்கப்படுகிறது, புதிய காதல் உறவில் இருந்தால், அந்த நபருடன் எல்லா நேரமும் செலவழிக்கப்படும். அது நண்பர்களை புறக்கணிக்கும் சூழலுக்கு கொண்டு சென்றுவிடும். அது மட்டுமின்றி சிலருடன் நண்பர்களுடன் பல மாதங்கள் பேசக்கூட நேரம் இருக்காது, அப்படி வேலையில் மிகவும் பிஸியாக இருந்துள்ளோம்.
உண்மையான நட்பு என்பது நிபந்தனையற்ற அன்பின் தூய்மையான வடிவங்களில் ஒன்றாகும், இது சில சமயங்களில் மிகவும் போலியாகவும், மெல்லியதாகவும், உணர்ச்சியற்றதாகவும் இருக்கும். சில நேரங்களில் மிகவும் கடினமாகவும் இருக்கும்.
2021-ஆம் ஆண்டின் சிறந்த பகுதி எனது நண்பர்கள்தான். நீங்கள் அனைவரும் என்னைப் போன்ற அற்புதமான நண்பர்களால் சூழப்பட்டிருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இன்ஸ்டாகிராமில் இருந்து தள்ளி இருக்க முடிவு செய்துள்ளேன்” மாளவிக்க மோகனன் பதிவிட்டு உள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)