விக்கிரவாண்டி பேருந்து நிலையத்தில் செல்பி பாயிண்ட் - 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு
ஒரு விரல் உருவம் பொருந்திய செல்பி பாயிண்ட்டில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி. பழனி ஒரு விரல் உயர்த்தி சுயபடம் எடுத்துக்கொண்டார்.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் முன்னிட்டு, விக்கிரவாண்டி பேருந்து நிலையத்தில், 100 சதவீதம் வாக்களிக்கும் விதமாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட வாக்களிக்கும் ஒரு விரல் உருவம் பொருந்திய செல்பி பாயிண்ட்டில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி ஒரு விரல் உயர்த்தி சுயபடம் எடுத்துக்கொண்டு, நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்குமாறு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில்,
இந்திய தேர்தல் ஆணையம் விழுப்புரம் மாவட்டம், 75. விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் 10.07.2024 அன்று நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு எய்திடும் பொருட்டு பல்வேறு துறைகள் மூலம், வாக்காளர்களிடையே வாக்களிப்பதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
அதனடிப்படையில், விக்கிரவாண்டி பேருந்து நிலையம், 100 சதவீதம் வாக்களிக்கும் விதமாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட வாக்களிக்கும் ஒரு விரல் உருவம் பொருந்திய செல்பி பாயிண்ட்டில் ஒரு விரல் உயர்த்தி சுயபடம் எடுத்துக்கொண்டு, நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்குமாறு பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வின் போது, பேருந்து நிலையத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தங்களுடைய ஜனநாயக கடமையினை நிறைவேற்றிடும் விதமாக கட்டாயம் தங்களுடைய வாக்கினை செலுத்திட வேண்டும் என்பது தொடர்பாக விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதனை தொடர்ந்து, விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகில் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக, பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருவதை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டதுடன், பறக்கும்படையினர் தற்பொழுது வரை வாகன சோதனையின்போது, சோதனை செய்யப்பட்ட வாகனங்களின் விவரம் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்களின் விவரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி. பழனி தெரிவித்தார்.