மேலும் அறிய

அப்படிப்போடு. மிஷினில் வேட்பாளர் படங்கள்.. தபால் ஓட்டு எண்ணும் முறையில் மாற்றம்.. தேர்தல் அப்டேட் இதோ!

தமிழக சட்டமன்ற தேர்தல் நாட்டுக்கே முன்னுதாரணமாக அமையும். தேர்தலுக்கான 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் தேவையான குடிநீர், கழிப்பறை வசதி செய்து தரப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கூறியுள்ளார்.

வெளிப்படைத்தன்மையுடன் நாட்டுகே முன்னுதாரமான தேர்தலாக தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டமன்ற தேர்தல்

2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தேர்தல் தேதி வெகு விரைவில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இரண்டு நாட்கள் பயணமாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளார். புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்த தலைவர்களுடன் சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். 

தமிழ்நாடு முன்னிலை

இதனையடுத்து சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “ஜனநாயகத்தைக் காப்பதில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாட்டில் நடைபெற்ற எஸ்.ஐ.ஆர். பணிகள் நாட்டுகே முன்னுதாரணமாக நடைபெற்றது. அந்த பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 72 நாடுகள் பங்கேற்ற தேர்தல் பெருங்கூட்டத்தில் தமிழ்நாடு பற்றி பெருமையாக பேசினோம்” என கூறினார்.

இப்படியான நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் நாட்டுக்கே முன்னுதாரணமாக அமையும் என்றும் தேர்தலுக்காக அமைக்கப்படும் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் தேவையான குடிநீர், கழிப்பறை வசதி செய்து தரப்படும் என்றும் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் வாக்குச்சாவடிக்குள் செல்போன் அனுமதிக்கப்படாது. அதேசமயம் செல்போன் கொண்டு வருபவர்கள் கொடுத்துச் செல்ல செல்போன் பாதுப்பகம் அமைக்கப்படும். சட்டமன்ற தேர்தலின் போது ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒருமுறை வாக்கு சதவிகிதம் வெளியிடப்படும். மேலும் தேர்தல் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் பதிவுகள் கண்காணிக்கப்படும். எனவே தேர்தல் அதிகாரிகள் எந்தவித அச்சமும் இன்றி செயல்படலாம். 

தபால் வாக்கு எண்ணிக்கையில் மாற்றம்

மேலும் வழக்கமாக முதலில் எண்ணப்படும் தபால் வாக்குகள் இந்த தேர்தலில் கடைசி 2 சுற்று வாக்குகள் இருக்கும்போது எண்ணப்படும். அதேபோல் வாக்குப்பதிவு மிஷினில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னங்களுக்கு பதில் இந்த முறை புகைப்படம் இடம் பெறும். தமிழ்நாட்டில் 20 முதல் 29 வயதான வாக்காளர்கள் ஒரு கோடி பேர் உள்ளனர். அதேசமயம் 19 முதல் 20 வயதிலான வாக்காளர்கள் 12.51 லட்சம் பேர் உள்ளனர்.

மொத்தம் தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2.90 கோடி பெண் வாக்காளர்கள் இருக்கின்றனர்.  எனவே தகுதியான ஒருவர் எப்போது வேண்டுமானாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6ஐ பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்” எனவும் தெரிவித்துள்ளார். 

எஸ்.ஐ.ஆர். விவகாரத்தை எதிர்த்து 267 பேர் தான் மேல்முறையீடு செய்திருந்தனர். 2011 மக்கள் தொகை அடிப்படையில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தேர்தல் அறிவிப்புக்கு பின் தேர்தல் பார்வையாளர்கள் தமிழ்நாட்டுக்கு வருகை புரிவார்கள். எந்த வாக்குச்சாவடியிலும் 1200க்கு மேற்பட்ட வாக்காளர்கள் இருக்க மாட்டார்கள். வாக்கு எண்ணும்போது வேட்பாளர் யாராவது ஆட்சேபம் தெரிவித்தால் விவிபாட்டில் உள்ள சீட்டுகள் எண்ணப்படும்” என ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு... 26,921 வாக்காளர்கள், 1,330 பேர் பாதுகாப்பு!
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு... 26,921 வாக்காளர்கள், 1,330 பேர் பாதுகாப்பு!
தேர்தல் பிரச்சாரம் ஓவர்! 6 மணிக்கு பிறகு இந்த விஷயத்தை செய்யக்கூடாது! என்னென்ன கட்டுப்பாடுகள்?
தேர்தல் பிரச்சாரம் ஓவர்! 6 மணிக்கு பிறகு இந்த விஷயத்தை செய்யக்கூடாது! என்னென்ன கட்டுப்பாடுகள்?
மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை மாலை 6 மணிக்கு மேல் இதையெல்லாம் செய்தால் சிறை நிச்சயம் - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை மாலை 6 மணிக்கு மேல் இதையெல்லாம் செய்தால் சிறை நிச்சயம் - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை

வீடியோ

வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!
மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
Trump on Crude Oil Price: அடிச்சாருயா அந்தர் பல்டி.! “கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஹார்முஸ் காரணமில்ல.!“ ட்ரம்ப் கூறியது என்ன.?
அடிச்சாருயா அந்தர் பல்டி.! “கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஹார்முஸ் காரணமில்ல.!“ ட்ரம்ப் கூறியது என்ன.?
Vivo Launches 3 Phones: 10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
Chennai Power Cut: சென்னைல புதன்கிழமை (07.10.2026) எந்தெந்த பகுதிகள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இதோ லிஸ்ட்
சென்னைல புதன்கிழமை (07.10.2026) எந்தெந்த பகுதிகள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இதோ லிஸ்ட்
Embed widget