Lok Sabha Election 2024: இன்னும் சற்றுநேரத்தில் வாக்குப்பதிவு.. மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது..!
Lok Sabha Election 2024: தமிழ்நாடு, புதுச்சேரியில் வாக்குப்பதிவு சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது.
Lok Sabha Election 2024: தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கி உள்ளனர்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் வாக்குப்பதிவு சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது. அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் வாக்கு இயந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இன்று மக்களவை தேர்தல்:
இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமான உலகமே உற்று நோக்கும் இந்திய மக்களவை தேர்தல் இன்று தொடங்குகிறது. 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது.
தமிழ்நாடு: வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடக்கம்:
தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 40 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காளை 7 மணிக்கு தொடங்குகிறது. தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கு 68, 321 வாக்குச்சாவடிகளுக்கு அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், 10. 92 லட்சம் பேர் முதல்முறையாக வாக்களிக்க உள்ளனர்.
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் மாதிரி வாக்குப்பதிவு முகவர்கள் முன்னிலையில் நடைபெற்றது
இன்று மக்களவை முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. காலை 7:00 மணிக்கு வாக்குப்பதிவு துவங்க உள்ள நிலையில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் காலை 6:00 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்றது. அனைத்துக் கட்சி வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் பிரதான கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட சுயேட்சை வேட்பாளர்கள் 17 பேர் போட்டியிடுகின்றனர். இந்த மாதிரி வாக்குப்பதிவில் 17 சின்னங்களுக்கும் வாக்களிக்கப்பட்டு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முறையாக செயல்படுகிறதா என்று பரிசோதனை செய்யப்பட்டு மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. மாதிரி வாக்கு பதிவு நிறைவுற்று தொடர்ந்து ஏழு மணி அளவில் வாக்குப்பதிவு துவங்க உள்ளது.