மேலும் அறிய

Jayakumar: நான் MLA ஆவேன்.. செங்கோட்டையன் கண்ணீர் வடிப்பார்.. ஜெயக்குமார் சவால்!

2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக தலைமையில் கூட்டணி அமைந்துள்ள நிலையில் புதிதாக களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்துடன் இதுவரை எந்த கட்சியும் கூட்டணி வைக்கவில்லை. 

2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் நான் ஜெயிப்பதைக் கண்டு தவெக மூத்த நிர்வாகி செங்கோட்டையன் ஆனந்த கண்ணீர் வடிப்பார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சவாக் விடுத்துள்ளார். 

2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் பம்பரமாக சுழன்று வருகிறது. திமுக, அதிமுக தலைமையில் கூட்டணி அமைந்துள்ள நிலையில் புதிதாக களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்துடன் இதுவரை எந்த கட்சியும் கூட்டணி வைக்கவில்லை. 

தவெகவை வைத்து அதிக சீட் பெற்ற கட்சிகள்

இப்படியான நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையனிடம், தமிழக வெற்றிக் கழகம் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு வரும் என எதிர்பார்த்தது. ஆனால் அக்கட்சி திமுகவுடன் இணைந்து விட்டது. இதனால் தனித்து போட்டியிட தவெக தயாராகி விட்டதா?” என கேள்வியெழுப்பப்பட்டது. 

அதற்கு, தொடர்ந்து காங்கிரஸ் கட்சி திமுகவுடன் தான் கூட்டணி வைக்கிறது. சில மன மாற்றங்கள் வந்திருக்கிறது. எங்களால் அவர்களுக்கு பயன் கிடைத்திருக்கிறது. இன்றைக்கு அதிமுக, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள், தவெகவுடன் இணைந்து விடுவோம் என சொல்லி கூடுதல் சீட்டுகளைப் பெற்றுள்ளது. தவெக தனித்து போட்டியிடுமா அல்லது வலிமையான கூட்டணி அமைக்குமா என்பதை பொறுத்திருந்து பாருங்கள்” என கூறினார். 

செங்கோட்டையனுக்கு ஜெயகுமார் சவால்

தொடர்ந்து அவரிடம், “விஜய் பத்திரிக்கையாளரை சந்திக்க திராணி இல்லாமல் இருக்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தவெகவுடன் யாரும் கூட்டணிக்கு வரவில்லை என்றவுடன் அக்கட்சி அதிமுக பக்கம் திரும்பியுள்ளது” என விமர்சனம் செய்தது பற்றி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த செங்கோட்டையன், “ஜெயக்குமார் வேண்டுமானால் நம்முடைய அணிக்கு வரலாம். அவருக்கு அதிமுகவில் சீட் கிடைக்கப் போவதில்லை. அவரின் மகனுக்கு தான் சீட் கொடுக்கப் போகிறார்கள். அவர் நல்ல நண்பர். அவரின் கருத்துக்கு பதில் சொல்வது சரியாக இருக்காது. ஒவ்வொருவரும் அவரது மனதில் தோன்றும் கருத்துகளை எல்லாம் எடுத்துச் சொல்லக்கூடாது. என்றைக்கும் தனித்து நின்று முதலமைச்சராகும் சூழலில் தான் விஜய் இருக்கிறார். மற்றவர்கள் வாக்கு கேட்டு வரும் அளவுக்கு அவர் இல்லை. அனைவரின் மனநிலையை புரிந்துக் கொண்டு பேசினால் நன்றாக இருக்கும்" என தெரிவித்தார். 

இதற்கு பதிலளித்த ஜெயக்குமார் , “அருமை அண்ணன் செங்கோட்டையனும், நானும் அன்புக்கு கட்டுப்பட்டவர்கள். ஆனால் அவர் எப்போது ஆரூடம் பார்க்கும் ஜோதிடர் ஆனார் என தெரியவில்லை. நிச்சயமாக ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். நான் எம்.எல்.ஏ., வேட்பாளராக நின்று ஜெயிப்பேன். அதைப் பார்த்து செங்கோட்டையன் ஆனந்த கண்ணீர் வடிப்பார்” என பதிலடி கொடுத்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

Gold Silver Rate Sep.1st: மாலையில் மகிழ்ச்சி கொடுத்த தங்கம்.! பரவாயில்லையே, இவ்ளோ குறைஞ்சுடுச்சே.! தற்போதைய விலை என்ன.?
மாலையில் மகிழ்ச்சி கொடுத்த தங்கம்.! பரவாயில்லையே, இவ்ளோ குறைஞ்சுடுச்சே.! தற்போதைய விலை என்ன.?
மம்தா பானர்ஜியின் சகோதரி மகள் தற்கொலை; வீட்டில் தூக்கில் தொங்கிய சடலம்; விசாரணை தீவிரம்
மம்தா பானர்ஜியின் சகோதரி மகள் தற்கொலை; வீட்டில் தூக்கில் தொங்கிய சடலம்; விசாரணை தீவிரம்
TN Cabinet Reshuffle : ’தயாராகும் பட்டியல்’ பதவியை இழக்கப்போகும் அமைச்சர்கள் யார், யார் ?
‘மாற்றத்திற்கு தயாராகும் அமைச்சரவை’ HIT லிஸ்டில் இருக்கும் பெயர்கள்..!
Mettur Dam Opening : ‘கையெடுத்து கும்பிட்ட முதல்வர் விஜய்’ மேட்டூரில் இருந்து காவிரி நீரை திறந்து வைத்தார்…!
Mettur Dam Opening : ‘கையெடுத்து கும்பிட்ட முதல்வர் விஜய்’ மேட்டூரில் இருந்து காவிரி நீரை திறந்து வைத்தார்…!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Silver Rate Sep.1st: மாலையில் மகிழ்ச்சி கொடுத்த தங்கம்.! பரவாயில்லையே, இவ்ளோ குறைஞ்சுடுச்சே.! தற்போதைய விலை என்ன.?
மாலையில் மகிழ்ச்சி கொடுத்த தங்கம்.! பரவாயில்லையே, இவ்ளோ குறைஞ்சுடுச்சே.! தற்போதைய விலை என்ன.?
மம்தா பானர்ஜியின் சகோதரி மகள் தற்கொலை; வீட்டில் தூக்கில் தொங்கிய சடலம்; விசாரணை தீவிரம்
மம்தா பானர்ஜியின் சகோதரி மகள் தற்கொலை; வீட்டில் தூக்கில் தொங்கிய சடலம்; விசாரணை தீவிரம்
TN Cabinet Reshuffle : ’தயாராகும் பட்டியல்’ பதவியை இழக்கப்போகும் அமைச்சர்கள் யார், யார் ?
‘மாற்றத்திற்கு தயாராகும் அமைச்சரவை’ HIT லிஸ்டில் இருக்கும் பெயர்கள்..!
Mettur Dam Opening : ‘கையெடுத்து கும்பிட்ட முதல்வர் விஜய்’ மேட்டூரில் இருந்து காவிரி நீரை திறந்து வைத்தார்…!
Mettur Dam Opening : ‘கையெடுத்து கும்பிட்ட முதல்வர் விஜய்’ மேட்டூரில் இருந்து காவிரி நீரை திறந்து வைத்தார்…!
ஃபிக்ஸ்டு பேட்டரி..ஹோண்டா இ.வி. ஸ்கூட்டருக்கு இந்தியாவில் காப்புரிமை: அசத்தல் ரேஞ்ச், அம்சங்கள்!
ஃபிக்ஸ்டு பேட்டரி..ஹோண்டா இ.வி. ஸ்கூட்டருக்கு இந்தியாவில் காப்புரிமை: அசத்தல் ரேஞ்ச், அம்சங்கள்!
Ration Shop Onion : அடி தூள்.! 3-ம் தேதி முதல் ரேஷன் கடையில் வெங்காயம் விற்பனை- ஒரு கிலோ இவ்வளவு தான்- அரசு அறிவிப்பு
அடி தூள்.! 3-ம் தேதி முதல் ரேஷன் கடையில் வெங்காயம் விற்பனை- ஒரு கிலோ இனி இவ்வளவு தான்- அரசு அறிவிப்பு
டாஸ்மாக்கில் ரூ. 10 எக்ஸ்ட்ரா வாங்குறாங்களா.! ஒரே ஒரு போன் கால்- மதுப்பிரியர்களுக்கு குட் நியூஸ்
டாஸ்மாக்கில் ரூ. 10 எக்ஸ்ட்ரா வாங்குறாங்களா.! ஒரே ஒரு போன் கால்- மதுப்பிரியர்களுக்கு குட் நியூஸ்
Japanese 7 Seater: ரூ.17 லட்சத்தில் புதிய 7 சீட்டரை இறக்கும் ஜப்பான் கம்பெனி - ஃபேமிலிக்கு செட்டாகுமா? மைலேஜ் வருமா?
ரூ.17 லட்சத்தில் புதிய 7 சீட்டரை இறக்கும் ஜப்பான் கம்பெனி - ஃபேமிலிக்கு செட்டாகுமா? மைலேஜ் வருமா?
Embed widget