மேலும் அறிய

Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க

Andhra Assembly Election: ஆந்திராவில் வாக்குப்பதிவின் போது, எம்.எல்.ஏ., ஒருவரை வாக்காளர் அறைந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Andhra Assembly Election: ஆந்திராவில் வாக்குப்பதிவின் போது ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., ஒருவரை,  வாக்காளர் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

எம்.எல்.ஏவை அறைந்த வாக்காளர்:

ஆந்திராவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவும் இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேநேரம், பல இடங்களில் ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் வாக்குச்சாவடியில், எம்,எல்.ஏ., ஒருவரை வாக்காளர் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.,..

குண்டூர் தொகுதியைச் சேர்ந்த தெனாலி ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., சிவகுமார் தனது பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்கச் சென்றுள்ளார். அப்போது வரிசையில் நிற்காமல் நேரடியாக வாக்குச்சாவடிக்குள் செல்ல முயன்றுள்ளார். இதை கண்டதும், நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்த ஒருவர், நீங்களும் வரிசையில் நின்று வாக்களியுங்கள், நாங்கள் நீண்ட நேரமாக காத்திருக்கிறோம் என வலியுறுத்தியுள்ளார்.

இதனால் கோபமடைந்த வாக்காளர் கன்னத்தில் அறைந்துள்ளார். நொடி நேரமும் தாமதிக்காத அந்த வாக்காளர், உடனடியாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., என்றும் தயங்காமல் சிவக்குமாரை கன்னத்தில் அறைந்துள்ளார். இதை கண்டதும் அவரது ஆதரவாளர்கள் மொத்தமாக திரண்டு, அந்த குறிப்பிட்ட வாக்காளரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. தெலுங்கு தேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நியாயத்தை கேட்டால் பொதுமக்களை தாக்குவதா? சிவக்குமாரை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

எம்.பி., மீது தாக்குதல்:

என்டிஆர் மாவட்டம் கம்பம்பாடு என்ற இடத்தில் வாக்குச் சாவடிகளைப் பார்வையிடச் சென்ற, தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த  விஜயவாடா எம்பி வேட்பாளர் கேஷினேனி சின்னி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகளால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் வந்த கார்கள் மீதும் கற்கள் வீசப்பட்டதாக கூறப்படுகிறது..

 YCP கட்சியினர் திட்டமிட்டு தாக்குதல்களை மேற்கொள்வதாகவும், ஆனால் போலீசார் அவர்களைத் தடுக்க முயற்சிக்கவில்லை எனவும் கேசிநேனி சின்னி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், “மக்கள் ஆதரவு இல்லை, தோற்கப்போகிறோம்  என்பதை உணர்ந்து தான் அவர்கள் இதுபோன்ற தாக்குதல்களை நடத்துகிறார்கள் என்றனர். இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. காவல்துறை அனைத்து மக்களுக்கும் வாக்களிக்க சம வாய்ப்பு வழங்க வேண்டும். இதுபோன்ற விஷயங்களை தேர்தல் ஆணையம் கவனிக்க வேண்டும்” என்று கேசிநேனி சின்னி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

உங்கள் வாக்குச்சாவடி இடம் மாறியுள்ளதா? தேர்தல் துறையின் முக்கிய அறிவிப்பு..
உங்கள் வாக்குச்சாவடி இடம் மாறியுள்ளதா? தேர்தல் துறையின் முக்கிய அறிவிப்பு..
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய சிறப்பு முகாம்கள் - முழு விவரம்!
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய சிறப்பு முகாம்கள் - முழு விவரம்!
தேர்தல் நிலவரம் : தாராபுரம், மதுராந்தகத்தில் முன்னிலை; மதுரையில் பட்டாசு மழை!
தேர்தல் நிலவரம் : தாராபுரம், மதுராந்தகத்தில் முன்னிலை; மதுரையில் பட்டாசு மழை!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அச்சத்தின் பிடியில் தமிழக மக்கள்" - தமிழக அரசு மீது இபிஎஸ் காட்டம்!
ஒரே நேரத்தில் 66 இராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை விதிப்பு - ஏன் தெரியுமா?
ஒரே நேரத்தில் 66 இராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை விதிப்பு - ஏன் தெரியுமா?
நவ.20-இல் திருச்சி செல்லும் முதல்வர் - இடைத்தேர்தலை குறிவைத்து காய் நகர்த்தலா?
நவ.20-இல் திருச்சி செல்லும் முதல்வர் - இடைத்தேர்தலை குறிவைத்து காய் நகர்த்தலா?
வங்கக்கடலில் புதிய தாழ்வு பகுதி: எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்? - வானிலை அறிக்கை
வங்கக்கடலில் புதிய தாழ்வு பகுதி: எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்? - வானிலை அறிக்கை
சிறுபான்மையினருக்கான நிதியுதவி திட்டம் - தமிழக அரசு வெளியிட்ட புது அறிவிப்பு என்ன?
சிறுபான்மையினருக்கான நிதியுதவி திட்டம் - தமிழக அரசு வெளியிட்ட புது அறிவிப்பு என்ன?
"புனித தலத்தில் இப்படியா?" - 1500 வருடப் பழமையான கோயிலுக்குள் செருப்புடன் சென்ற அமைச்சர்!
சிக்கப்போவது யார்? - அறிவுலக புத்தக்கொள்முதல் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
சிக்கப்போவது யார்? - அறிவுலக புத்தக்கொள்முதல் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
சதமடித்து அலறவிட்ட ஆர்யவீர் சேவாக் - U19 கிரிக்கெட் தொடரில் ருத்ரதாண்டவம் ஆடிய சேவாக் மகன்!
சதமடித்து அலறவிட்ட ஆர்யவீர் சேவாக் - U19 கிரிக்கெட் தொடரில் ருத்ரதாண்டவம் ஆடிய சேவாக் மகன்!
Embed widget