மேலும் அறிய

Exclusive: செந்தில்பாலாஜி இல்லாதது திமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்துமா? - அமைச்சர் டிஆர்பி ராஜா விளக்கம்

செந்தில் பாலாஜி இல்லாதது திமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு, அமைச்சர் டிஆர்பி ராஜா பதிலளித்தார்.

கோவை வரதராஜபுரம் பகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அறிமுகக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் டிஆர்பி ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் டிஆர்பி ராஜா, “இந்த தேர்தலில் திமுக வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. எதிரணியினர் பிரிந்து உள்ளார்கள். ஒவ்வொரு நாளும் உதயசூரியன் சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். பாஜகவும், அதிமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். இரண்டும் ஒரே இயக்கங்கள் தான்.

தமிழினத்தை அழிக்க நினைக்கும் பாஜகவை ஒழிக்க வேண்டிய தேர்தல் இது. 4 ரெய்டு போட்டால் இந்த இயக்கங்கள் அசருமா? எதற்கும் அசராத இயக்கங்கள். செந்தில் பாலாஜி மீண்டும் வருவார். வெகு விரைவில் வருவார். எதிரணியினர் அனைவரும் டெபாசிட் இழக்க வேண்டும். நான் முருகன் கோவிலுக்கு செல்கிறேன். எனது தாத்தாவும், முதலமைச்சரும் கோவிலுக்கு போக வேண்டாம் என சொல்லவில்லை. நான் சகோதரர் வீட்டிற்கு சென்று நோன்பு கஞ்சி குடித்தால் உனக்கு என்ன? இது தேர்தல் அல்ல. போர். இனத்தை, தமிழ் மொழியை அழிக்க நினைப்பவர்களுக்கு எதிரான போர். ஒவ்வொருவரும் போராடினால் தான் மகத்தான வெற்றி கிடைக்கும். இது பெரியார், அண்ணா, கலைஞர் மண். அடிமைகளையும், ஆதிக்கவாதிகளையும் ஒழிக்க வேண்டும். மிக பிரமாண்டமான வளர்ச்சி கோவைக்கு காத்திருக்கிறது” எனத் தெரிவித்தார்.

Exclusive: செந்தில்பாலாஜி இல்லாதது திமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்துமா? - அமைச்சர் டிஆர்பி ராஜா விளக்கம்

இதையடுத்து பேசிய திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், “வருகின்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். கோவை பாஜக கோட்டை அல்ல. பாஜகவில் யார் போட்டியிட்டாலும், கோவையில் திமுகவின் கோட்டை என்பதால் திமுக போட்டியிடும் முதலமைச்சர் கூறினார். பத்து ஆண்டு கால பாஜக ஆட்சியில் 70 சதவீத விசைத்தறிகள் முடங்கி விட்டது. சிறு,குறு தொழில் கூடங்கள் மூடப்பட்டுள்ளது. அதானி, அம்பானி போதும் என பாஜக அரசு நினைக்கிறது. நான் எப்போதும் இங்கே தான் இருப்பேன். மற்றவர்கள் ஜெயித்தால் அவர்களை பார்க்க முடியாது. பாஜக எந்த திட்டத்தையும் தரவில்லை. எதிரே நிற்பவர்கள் அனைவரும் டெபாசிட் இழக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

பின்னர் அமைச்சர் டிஆர்பி ராஜா ஏபிபி நாடுவிற்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “திமுகவிற்கு தமிழ்நாட்டில் போட்டியே இல்லை. முதலமைச்சரின் நலத்திட்டங்கள் பெண்கள் மற்றும் மக்களிடம் சென்று சேர்ந்து உள்ளது. எனவே திமுக மற்றும் இந்திய கூட்டணி வேட்பாளர் அனைவரும் மகத்தான வெற்றி பெறுவார்கள். எதிரணியினர் அனைவரும் டெபாசிட் இழப்பார்கள்” எனத் தெரிவித்தார். செந்தில் பாலாஜி இல்லாதது திமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு, “யார் சொன்னார்கள் அவரில்லை என? எங்கள் மூலமாக அவர் என்றும் கோவை தொகுதியில் இருந்து கொண்டுள்ளார். அவர் மிக விரைவில் வெளியே வருவார். வெளியே வந்து களத்தில் இறங்கி சண்டை போடுவார்” எனப் பதிலளித்தார்.

தலைப்பு செய்திகள்

செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
PM Modi: இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
Skoda Kylaq Rivals: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் வரப்போகும் 3 SUV-விக்கள் - இல்லாத வசதிகளே இல்லை, கைலாக்கிற்கு சவால்
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் வரப்போகும் 3 SUV-விக்கள் - இல்லாத வசதிகளே இல்லை, கைலாக்கிற்கு சவால்
Embed widget