மேலும் அறிய

"எங்களுக்கு மட்டும் நிதி இல்லையா?" திமுக அறக்கட்டளை நிதியையாவது கொடுங்கள் - கோரிக்கை விடுக்கும் ஆசிரியர்கள்..

37 லட்சம் பேருக்குச் சிறப்பு நிதி வழங்க நிதி இருக்கும்போது, ஆசிரியர்களைப் பணிநிரந்தரம் செய்ய மட்டும் நிதி இல்லையா? என தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு அரசுக்குக் கேள்விகளை எழுப்பியுள்ளது.

"தமிழகத்தில் 37 லட்சம் பேருக்குச் சிறப்பு நிதி வழங்க நிதி இருக்கும்போது, 15 ஆண்டுகளாகப் பணியாற்றும் 11,773 பகுதிநேர ஆசிரியர்களைப் பணிநிரந்தரம் செய்ய மட்டும் நிதி இல்லையா?" எனத் தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில அரசுக்குக் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளது.தேர்தல் நெருங்கும் வேளையில், திமுகவின் 181-வது வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி ஆசிரியர்கள் குடும்பத்தினர் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாக்குறுதி 181: 15 ஆண்டுகாலக் காத்திருப்பு

இது குறித்துத் தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாரம் கடந்த 15 ஆண்டுகளாகக் கேள்விக்குறியாகவே உள்ளது. 2016 மற்றும் 2021 ஆகிய இரண்டு சட்டமன்றத் தேர்தல்களின் போதும், 'திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரும் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள்' என தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். குறிப்பாக, திமுக தேர்தல் அறிக்கையின் வாக்குறுதி எண் 181-இல் இது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்று 5 ஆண்டுகள் முடியவுள்ள நிலையிலும், இன்றுவரை அந்த வாக்குறுதி காகித அளவிலேயே உள்ளது."

அரசாணை வெளியிடுவதில் தாமதம்: ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

கடந்த ஜனவரி மாதம் ஆசிரியர்கள் நடத்திய தொடர் போராட்டத்தின் விளைவாக, ஜனவரி 14-ஆம் தேதி ஊதிய உயர்வு உள்ளிட்ட சில அறிவிப்புகளை அரசு வெளியிட்டது. ஆனால், அந்த அறிவிப்புகள் முறையாகச் செயல்படுத்தப்படவில்லை என ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஊதிய உயர்வு: ரூ. 2,500 சம்பள உயர்வு மற்றும் மே மாத விடுமுறைக்கால ஊதியம் ரூ. 10,000 குறித்த அறிவிப்பு வெளியாகி 48 நாட்களுக்குப் பிறகு, மார்ச் 3-ஆம் தேதிதான் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

* காப்பீடு திட்டம்: 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட ரூ. 10 லட்சம் மருத்துவக் காப்பீடு திட்டம், அறிவிக்கப்பட்டு 32 மாதங்கள் கடந்தும் இன்னும் அரசாணையாக வடிவம் பெறவில்லை.

*சிறப்பு மதிப்பெண்: காலிப்பணியிடத் தேர்வுகளில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட சிறப்பு மதிப்பெண் குறித்த அரசாணையும் நிலுவையில் உள்ளது.

"நாங்கள் கேட்டது பணிநிரந்தரம் மட்டுமே"

மேலும் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய செந்தில்குமார், "எந்த ஒரு பகுதிநேர ஆசிரியரும் அரசிடம் பிச்சை கேட்கவில்லை. நாங்கள் ரூ. 2,500 உயர்வையோ அல்லது சிறப்பு மதிப்பெண்ணையோ கோரிக்கையாக வைக்கவில்லை. எங்களது ஒரே கோரிக்கை 'பணிநிரந்தரம்' மட்டுமே. ஆனால், ஆசிரியர்கள் கேட்டதை நிறைவேற்றிவிட்டதாக முதல்வர் அப்பட்டமான ஒரு பிம்பத்தை உருவாக்கி வருகிறார். 11,773 குடும்பங்களின் வாழ்வாதாரத்தோடு அரசு விளையாடக் கூடாது," என ஆவேசமாகத் தெரிவித்தார்.

நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடா?

அரசு பல்வேறு தரப்பினருக்கு நிதி ஒதுக்குவதைச் சுட்டிக்காட்டிய ஆசிரியர்கள் கூட்டமைப்பு, தங்களுக்கு மட்டும் நிதி இல்லை என்று கூறுவதை ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.

"மகளிர் உரிமைத் தொகைக்கு ரூ. 6,550 கோடி, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2,000 சிறப்பு நிதி, மீனவர்களுக்கு ரூ. 8,000 உதவித்தொகை மற்றும் தேயிலை விவசாயிகளுக்கு ஆதார விலை எனப் பல கோடி ரூபாய்களை முதல்வர் ஒதுக்குகிறார். இதற்கு எல்லாம் நிதி இருக்கும்போது, மாதம் வெறும் 20 கோடி ரூபாய் கூடுதலாகச் செலவாகும் பகுதிநேர ஆசிரியர்களின் பணிநிரந்தரத்திற்கு மட்டும் நிதி இல்லையா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

திமுக அறக்கட்டளைக்குக் கோரிக்கை

அடுத்த சில நாட்களில் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில், முதல்வர் உடனடியாக மனது வைக்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர். "அரசு நிதியில் சிக்கல் இருந்தால், திமுக தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிய பாவத்திற்காக, திமுக அறக்கட்டளை நிதியிலிருந்து ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நிதியுதவி செய்ய வேண்டும்," என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த கல்வியாண்டான மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் காலமுறை ஊதியம் வழங்க இப்போதே முதல்வர் ஆணையிட வேண்டும் என்றும், தவறினால் 11,773 ஆசிரியர் குடும்பங்களின் கண்டனக் குரல் வரவிருக்கும் தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
’’நீதி மறுக்கும் நிர்வாகம்; மனோன்மணியம் பல்கலை ஊழியர்களுக்கு இதை செய்ங்க’’ அன்புமணி வலியுறுத்தல்
’’நீதி மறுக்கும் நிர்வாகம்; மனோன்மணியம் பல்கலை ஊழியர்களுக்கு இதை செய்ங்க’’ அன்புமணி வலியுறுத்தல்
மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் வெளியீடு... ஆகஸ்ட் முதல் வாரத்தில் நேரடி கலந்தாய்வு: எங்கு தெரியுமா?
மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் வெளியீடு... ஆகஸ்ட் முதல் வாரத்தில் நேரடி கலந்தாய்வு: எங்கு தெரியுமா?

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
RB Udhayakumar: ”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
TN Weather News: சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
Rasi Palan Today (29-07-2026): ஆடி மாத பௌர்ணமி.. இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!
Rasi Palan Today (29-07-2026): ஆடி மாத பௌர்ணமி.. இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
Embed widget