Villupuram: மின்துறை ஊழியர்கள் அலட்சியத்தால் பறிபோன விவசாயி உயிர்... தொடரப்பட்ட வழக்கு! என்ன நடந்தது..?
விழுப்புரம : மரக்காணம் அருகே உள்ள மின்சார ஊழியர்களின் அலட்சிய போக்கால் மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு
விழுப்புரம்: மரக்காணம் அருகே நடுக்குப்பம் திரவுபதி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 45). விவசாயியான இவர் இன்று காலை 7 மணியளவில் தனக்கு சொந்தமான நிலத்திற்கு சென்றார். அங்கு உயர்மின் அழுத்த கம்பி தாழ்வாக சென்றது. இக்கம்பி நிலத்தில் இருந்த தென்னை மரத்தில் உரசி சென்றது. இந்த மரத்தின் தென்னை ஓலை நிலத்திற்கு செல்லும் வழியில் படர்ந்து இருந்தது. அந்த வழியில் நடந்து சென்ற விவசாயி மணிகண்டன், வழியில் படர்ந்திருந்த தென்னை ஓலையை நகர்த்திவிட்டு செல்ல முயற்சித்தார். தென்னை மரத்தில் பாய்ந்த உயர் மின் அழுத்த மின்சாரம், மணிகண்டன் மீது பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.
அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனை பார்த்த பக்கத்து நில உரிமையாளர்கள், இது தொடர்பாக மணிகண்டன் குடும்பத்தாருக்கும், மரக்காணம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அங்கு வந்த விவசாயி மணிகண்டன் குடும்பத்தார் கதறி அழுத காட்சி காண்போரின் மனதை கலங்கடித்தது. சம்பவ இடத்திற்கு வந்த மரக்காணம் போலீசார் மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி கனகசெட்டிக்குளம் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த பகுதியில் உயர் மின் அழுத்த கம்பிகள் தாழ்வாக செல்கிறது என மின்துறை அலுவலகத்தில் பலமுறை புகார் கொடுத்துள்ளோம். இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்தி ருந்தால் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்